Ticker

6/recent/ticker-posts

தாயை கொடுமைப்படுத்திய மகனை கொலை செய்த தந்தை

அரநாயக்க பொலிஸ் எல்லைக்குட்பட்ட புனாபொகுன, துல்தெனிய கிராமத்தில் தந்தையொருவர் தனது மகனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

கத்திக் குத்து தாக்குதலுக்குள்ளானவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்துள்ளார். அமித் பிரசாத் ஹேமச்சந்திர என்ற 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

61 வயதான அவரது தந்தையே இந்த கொலையை செய்துள்ளார். உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனை மற்றும் திருட்டு போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞன் பணத்திற்காக பெற்றோரை தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். அவர்களை தாக்க முயற்சிப்பதும், நீண்ட காலமாக இந்த பிரச்சனைகளை சகித்துக் கொண்டிருந்துள்ளனர். இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தனது தாயை துன்புறுத்தி சித்திரவதை செய்த கொடுமைகளை செய்துள்ளார்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபத்தில் இளைஞனை அவரது தந்தை கத்தியால் குத்தியுள்ளார்.

இளைஞனின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சடலம் மேலதிக பரிசோதனைக்காக கேகாலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

tamilwin


 



Post a Comment

0 Comments