தெஹிவளை கல் விகாரபிளேஸில் இலக்கம் 14 இல் அமைந்துள்ள காணியை, சவுதி அரேபியாவைச் சேர்ந்த தனவந்தர் பாபக்கர் அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்காகா வாங்கி அன்பளிப்பு செய்திருந்தார்.
சுமார் 80 பேச் பரப்பைக் கொண்ட காணியை ஜமியத்துல் உலமாவின் செயலாளர் களில் ஒருவர் உட்பட சில உலமாக்கள் இவர்களுடன் இனைந்த ஒரு சிலரும் இவ்விடத்தை அபாகரிக்க முற்பட்டு அதற்காக போலியான ஆவணங்களையும் தயாரித்து முயற்சிகள் செய்தமை தொடர்பான செய்திகளை அப்பகுதி மக்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிட்டு இருந்தனர்.
2002 ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட காணியை பாபகர் அவர்கள் தெஹிவளை நகர சபையில் ஒரு பள்ளிவாசலாக, பொதுச் சொத்தாக பதிவு செய்திருந்தார். பின்னர் இவ் உலமாக்கள்க்கள் திருட்டுத்தனமாக ஆவணங்களில் திருத்தங்களை செய்து, நகர சபை பதிவையும் தங்களது பெயரில் மாற்றி, நகர சபையின் பதிவு செல்லுபடியற்றது,இதை பொது சொத்தாக பதிவு செய்ய நகர சபைக்கு அதிகாரம் இல்லை எனவும், இது பள்ளிவாசல் அல்ல எனவும் தங்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட ஒரு சொத்து எனவும் இதைப் பொறுப்பில் விட்டுச் சென்ற பொறுப்புக்குறிய உலமாக்கள் நீண்ட காலமாக கல்கிசை நீதிமன்றத்தில் வாதாடி வந்தனர்.
மேலும் இதை விற்பனை செய்ய இவர்கள் முயற்சிகள் செய்யவே இவ்ஆவனங்களை மக்கள் CID இடம் கையளித்து இக்காணியை இவர்கள் 21 வருடங்களாக அபகரித்து வைத்திருந்ததற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மக்களின் கோரிக்கையையும் சாட்சி ஆவணங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம் இது ஒரு பாதுகாக்கப்பட வேண்டிய வக்பு சொத்து எனவும் இதை வக்பு செய்யும்படியும் வக்பு சபைக்கு உத்தரவிட்டதோடு, ஜமீயத்துல் உலமா செயலாலர் தமது சொந்த சொத்து என நீதி மன்றத்தில் சமர்பித்த மனுவையும் நீதிமன்றம் நகராகரித்தது.
இதைத் தொடர்ந்து மக்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக இம்மோசடியை வெளிப்படுத்தவே சமூக முக்கியஸ்தர்கள் ஜமியத்துல் உலமாவின் உயர்வு பீடம் போன்றவை இதில் தலையிட்டு சர்ச்சைக்குரிய செயலாளரிடமிருந்து இதை பறிமுதல் செய்து வக்பு சொத்தாக பதிவு செய்தனர். தற்போது இது ஒரு வக்பு சொத்தாக வக்பு சபை பதிவு செய்துள்ளது.
பதிவு இலக்கம் ( Registration Number) R/2652/C/249 இலங்கையின் பதிவு செய்யப்பட்ட பள்ளி வாசல்களில் 2652 பள்ளிவாசலாகவும் கொழும்பு மாவட்டத்தின் 249 வது பள்ளிவாசலாகவும் வக்பு சபை இதை பதிவு செய்துள்ளது.
இதன் பின்பு ஆவணங்களையும் மக்களின் கோரிக்கையும் ஆராய்ந்த நீதிமன்றம் இது பொதுச் சொத்து எனவும் இவ்விடத்தை பள்ளிவாசலாக பதிவு செய்து , இதனை விற்பனை செய்த முயற்சித்தவர்களுக்கு எதிராக விசாரணை ஒன்றை மேற்கொள்ளும்படியும் கலாச்சார அமைச்சர் அவர்களால் கலாச்சார அமைச்சின் பணிப்பாளர் அவர்களுக்கு விடப்பட்டிருந்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு அபகரிப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் கட்டளை ஒன்றையும் பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் கட்டளையே கருத்தில் கொள்ளாது, நீதிமன்றத்தின் கட்டளைக்கு தலை வணங்கி பள்ளிவாசலை பதிவு செய்கின்றோம் என குறிப்பிடாமல், அபகரிப்பாளர்களை பாதுகாக்கும் விதமாக, 2012 ஆம் ஆண்டு வக்புசபைக்கு மக்கள் இதை பள்ளிவாசலாக பதிவு செய்யும்படி விடுத்திருந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக பள்ளிவாசலை பதிவு செய்து, அதற்கான விளக்கத்தையும் ஆவணங்களை வெளியிட்டுள்ளனர்.
இவ்விடயத்தில் சண்டியர்களாக இருந்த உலமாக்களும் இவர்களின் சட்டத்தரணியும், நீதிமன்றத்தால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், தற்போது நொண்டியர்களாக மாறி இதை பள்ளிவாசலாகவும் ஒரு பொது சொத்தாகவும் பதிவு செய்யும்படி வக்பு சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். எனவே இதை வக்பு சபை ஒரு பொது சொத்தாக பள்ளிவாசலாக தற்போது பதிவு செய்துள்ளது.
மேலும் வக்பு சபை தனது தீர்மானத்தில் 2012 ஆம் ஆண்டின் மக்களின் கோரிக்கையை மேற்கோள் காட்டியதால் இது 12 வருடங்களுக்கு முதல் பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு பொது சொத்துமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இதை பாபக்கர் அவர்கள் 2002 ஆம் ஆண்டு நகரசபையில் ஒரு பள்ளிவாசலாக பதிவு செய்ததால், இது 2002 ஆம் ஆண்டே பள்ளிவாசலாக பதிவு செய்யப்படவேண்டிய ஒரு பொது சொத்தாகும்.
எனவே 2002 ஆம் ஆண்டு முதல் இவர்கள் இக்காணியை அபகரித்து வைத்திருந்தது வக்பு சபையின் தீர்மானத்தின் மூலம் நிரரூபணமாகியுள்ளது.
மேலும் வக்புசபையில் விலைபோன சில அதிகாரிகள் இதை நீதிமன்றம் கட்டளையிட்டதன் அடிப்படையில் பதிவு செய்யாமல், அபகரிப்பாளர்களை பாதுக்க்கும் விதமாக பதிவு செய்த முறைமை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக இருந்தாலும், 21 வருட போராட்டத்தில் இது பள்ளிவாசல் அல்ல என அபகரிப்பாளர்கள் வாதாடிய நிலையில், இது பள்ளி வாசலை பதிவு செய்தது சம்பந்தமாக மக்கள் தமது திருப்தியை தெரிவித்துள்ளனர்.
அடுத்து கல்கிசை நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் வழக்கில் இது பள்ளிவாசல் அல்ல, தங்களது சொத்தாகும் என்ன வாதாடும் நிலையில், இந்த வழக்கானது ஜனவரி 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இது பொதுச்சொத்து இது பல வருடங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு சொத்தாகும் என வக்பு சபை ஆவணங்களை வெளியிட்டுள்ள நிலையில், கல்கிசை நீதிமன்றத்தில் இது பள்ளிவாசல் அல்ல என வாதாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட நீதிமன்றத்தில் இது பள்ளிவாசல் அல்ல என வாதடும் இவர்கள், தற்போது மேன்முறையீட்டு நீதிமனாறத்தில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டதால் இது பொதுச்சொத்து இது பள்ளிவாசல் என வக்பு சபையிடம் சரணடைய வேண்டி ஏற்பட்டது.
இவர்கள் சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். சூழ்ச்சி செய்வதில் அல்லாஹ் வல்லமை மிக்கவன் என்ற குர்ஆன் வசனத்தை இவர்கள் இதன் பின்பாவது விளங்கிக் கொள்ளட்டும்.
மேலும் காணி அபகரிப்பு விடயத்தில் தோல்வியுற்ற இவர்கள், எரிகின்ற வீட்டில் பிடுங்கியது மிச்சம் என்ற சொல்லுக்கமைய இக்காணி விடயத்தில் அறக்கட்டளை (trust) ஒன்றை அமைத்துள்ளதாகவும், அதன் மூலம் தங்களது அதிகாரத்தை வைத்து இது பள்ளிவாசல் அல்ல என நீதிமன்றத்திற்கு சத்தியக் கடதாசி வழங்கி, இவர்களுக்கு காணியை களவாட உதவி செய்த தமது சகாக்களை இதன் நம்பிக்கை பொறுப்பாளர்களாக பதிவு செய்ய முற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வக்பு சட்டத்தின் 10 வது பிரிவின் படி நம்பிக்கை பொறுப்பாளாக விண்ணப்பித்த விண்ணப்ப தாரர்களே நம்பிக்கை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
இதற்கான விண்னப்பதை நீதி மன்றம் மூலம் வக்பு சபைக்கு பொதுமக்கள் சமர்பித்திருந்தனர்.
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், அபகரிப்பாளர்களிடம் விலைபோன கலாச்சார அமைச்சின் மற்றும் வக்பு சபையின் சில அதிகாரிகளும் பள்ளிவாசல் பதிவிற்கு பின்னர் நீதிமன்ற உத்தரவை மீறி இவர்களின் முயற்சியை நிறைவேற்ற முயற்சிகள் செய்து வருகின்றனர்.
நீதிமன்றம் மூ்லம் பொதுமக்கள் இதற்காக நம்பிக்க பொறுப்பாளர்களை பெயரிட்டு நியமிக்கும் படி இதை நிறைவேற்றும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நீதி மன்றத்தின் உத்தரவை மீறி, கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் இது பள்ளிவாசல் அல்ல தனியார் சொத்து என சத்தியக் கடதாசி வழங்கியுள்ளவர்களின் பெயரை பட்டியலிட்டு வக்பு சபையிடம் வழங்கியுள்ளனர். வக்பு சபையில் விலைபோன சில அதிகாரிகள் சட்ட விரோதமாக இவர்களை நியமிக்கும் முயற்சியில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர்.
மேலும் காணியை விற்பனை செய்ய இவர்களால் எழுதப்பட்ட அறக்கட்டளைக்கு எதிராக இரண்டு வழக்குகள் தொடரும் நிலையில், விற்பனை செய்யமுடியாது என புதிய அறக்கட்டளை ஒன்றையும் காணிப்பதிவாளர் காரியாலயத்தில் சட்ட விரோதமாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் புதிய அறக்கட்டளை ஒன்றை டிசம்பர் 6 ஆம் திகதி பதிவு செய்துள்ளதுடன், அதே தினத்தில் இதற்கான ஒப்புதலையும் கையொப்பமிட்டு வக்பு சபை ஒப்புதல் வழங்கியுள்ளை அடுத்த விநோதத்திற்குறிய அம்சமாகும்.
டிசம்பர் 6 ஆம் திகதி காணிபாபதிவாளர் காரியாலயத்தில் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டு, அறக்கட்டளை கலாச்சார அதே தினத்தில் அமைச்சின் பணிப்பாளரிடம் கையளிகப்பட்டு, அதே தினத்தில் அவரால் வக்பு சபைக்கு கையளிக்கப்பட்டு, வக்பு சபை அதே தினத்தில் காலை பத்து மணியளவில் அனுமதியும் வழங்கியுள்ளமை ஒரு உலக சாதனையாகும்.
இப்படியான திருடர்களை இன்னும் செயலாளர் பதவியில் வைத்திருப்பது அடுத்த வேடிக்கையாகும்.
பேருவளை ஹில்மி
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments