Ticker

6/recent/ticker-posts

பிரபல சுற்றுலா பட்டியலில் உள்ள நாடுகள்: இலங்கை எத்தனையாவது இடம் தெரியுமா!


2024ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமான 10 தனிப் பயண சுற்றுலா இலக்குகளுக்கான பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

அந்த வகையில் 30 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட சுற்றுலாப் பயணிகளை சிறு குழுவாக இணைத்து அவர்களுக்கான பயணங்களை ஏற்பாடு செய்யும் போது எடுக்கப்பட்ட கருத்துகணிப்புக்கமைய இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கான சிறந்த போக்குவரத்து வசதிகளை இலங்கை சிறந்த முறையில் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வருகை

இதன்படி இந்த ஆண்டு ஆரம்பம் முதலே  இலங்கைக்கு  அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனவே இவ்வாறான தரப்படுத்தல்கள்  மூலம்  மேலும் பல சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் என்பதோடு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவும் முடியும்.

இலங்கையில் சுற்றுலாதாரிகளின் வருகை மூலம் பெருமளவு வருமானத்தை அரசு பெற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

ibctamil


 



Post a Comment

0 Comments