Ticker

6/recent/ticker-posts

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் ஹோன்ஷு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந் நிலநடுக்கம்  (04.01.2023) காலை 8.16 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹோன்ஷு தீவின் மேற்கு கடற்கரைக்கு அருகில் 40.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

ஜப்பானில் கடந்த 1ஆம் திகதி ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கம் அந்நாட்டின் இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா மாகாணங்களை தாக்கியது.

இந்நிலநடுக்கத்தை தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகளில் இதுவரை 82 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உயிரிழப்புக்கள் குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தொடா் நிலநடுக்கங்களைத் தொடா்ந்து இஷிகவா மாகாணத்துக்கு தீவிர சுனாமி எச்சரிக்கையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குறைந்த அளவிலான சுனாமி எச்சரிக்கையும் ஜப்பான் அரசு விடுத்தது.

மேலும் கடந்த சில நாட்களாக ரஷியா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tamilwin


 



Post a Comment

0 Comments