Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பின்னடைவு: கைது செய்யப்பட்ட ‘மொசாட்’ உளவாளிகள் (காணொளி)


இஸ்ரேலின் வெளிநாட்டு உளவுத்துறையான மொசாட் சார்பாக உளவு பார்த்ததாகவும், உளவு நடவடிக்கைகளை திட்டமிட்டதாகவும் சந்தேகிக்கப்படும் 33 பேரை துருக்கி அதிகாரிகள் கைது செய்துள்ள்ளனர்.

சர்வதேச உளவுத்துறையை மையமாகக் கொண்டு இஸ்தான்புல் சட்டமா அதிபர் அலுவலகத்தின் பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் விசாரணையைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 எட்டு மாகாணங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனை 
இந்த கைது நடவடிக்கை தொடர்பான காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா, எட்டு மாகாணங்களில் ஒரே நேரத்தில் 57 இடங்கள் சோதனை செய்யப்பட்டதாகக் கூறினார்.
மேலும் 13 சந்தேக நபர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொசாட்டின் திட்டம் கண்டறிவு
"நமது நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு எதிராக உளவு பார்த்தல், பின்தொடர்தல், தாக்குதல் மற்றும் கடத்தல் போன்ற தந்திரோபாய பணிகளை" இஸ்ரேலிய உளவுத்துறை மேற்கொள்ள முற்படுகிறது என்று அதிகாரிகள் கண்டறிந்த பின்னர், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக யெர்லிகாயா கூறினார்.

சோதனையின் போது, ஏராளமான யூரோக்கள், டொலர்கள் மற்றும் "பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பணம்" உரிமம் பெறாத துப்பாக்கி, அத்துடன் பல தோட்டாக்கள் மற்றும் டிஜிட்டல் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

போராட்டம் உறுதியுடன் தொடரும்
யெர்லிகாயாவால் வெளியிடப்பட்ட காணொளியில் , காவல்துறை, குடியிருப்புகளுக்குள் புகுந்து, சந்தேகப்படும்படியானவர்களை கைவிலங்கு போட்டு பிடிப்பது, வளாகத்தை சோதனை செய்வது மற்றும் சந்தேக நபர்களை காவல்துறைவாகனங்களில் அடைப்பது போன்றவற்றைக் காட்டுகிறது.

"அமைதியை சீர்குலைக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற அமைப்புகள் மற்றும் உளவாளிகளுக்கு எதிரான எங்கள் போராட்டம்..." "உறுதியுடன்" தொடரும் என்று உள்துறை அமைச்சர் கூறினார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேல் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. 

ibctamil


 



Post a Comment

0 Comments