Ticker

6/recent/ticker-posts

"இஸ்ரேல் பயங்கரவாதிகள் போரை நிறுத்தும்வரை நாங்கள் நிறுத்தப்போவதில்லை"...ஹவுதி போராளிகள்


யேமனின் ஹவுதி போராளிகள்  பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக செங்கடலில் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

யேமனின் ஹவுதி போராளிகள் இஸ்ரேலுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் கப்பல்கள் மீது தெற்கு செங்கடலில் தொடர்ந்தும்  தாக்குதல் நடத்துவதையிட்டும் பின்வாங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. 

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பாலஸ்தீன மக்களுக்கும் , காசா மீதான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலுக்கு எதிராகவும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதாக ஹவுதி போராளிகள் உறுதியளித்தனர். எனவே, இது உலகளாவிய மற்றும் இஸ்ரேலிய பொருளாதாரத்தில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது?,என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் 23 ஆயிரத்துக்கம் மேற்பட்ட  அப்பாவி பொது மக்கள் கொலைசெய்யப் பட்டுள்ளார்கள்.காசா தரை மட்டமாக்கப்பட்டு மக்கள் சொல்லொண்ணாத் துன்பத்தை அனுபவிக்கின்றார்கள்.

இந்நிலையில் யேமனின் ஹவுதி போராளிகள் காசா மக்களுக்கு ஆதரவாக,போரிடுவதாகவும்,இஸ்ரேல் பயங்கரவாதிகள் போரை நிறுத்தும்வரை நாங்கள் போரை நிறுத்தப்போவதில்லை,என்றும் தெரிவித்துள்ளார்கள்.


 



Post a Comment

0 Comments