
வாரத்தில் இத்தனை மணி நேரங்கள்தான் வேலை பார்க்க வேண்டும் என்று வரைமுறைகள் இருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அதைவிட அதிகமான நேரம் வேலை பார்க்கிறார்கள். இதனால் அவர்களுக்கு work-life பேலன்ஸ் இல்லை. வேலையில் அழுத்தம், நீண்ட நேரம் வேலை பார்ப்பது, உடலுக்கு பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது போன்ற புகார்கள் ஒருபக்கம் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை பார்த்தால் போதும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுபோன்ற பிரச்சனைக்கு செயற்கை நுண்ணறிவு உதவியாக இருக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவித்து உள்ளது.
ஒரு பக்கம் செயற்கை நுண்ணறிவு பலவிதங்களில் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் கூட, ஆபத்தும் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல், மனிதர்கள் செய்யக்கூடிய பல வேலைகளை செயற்கை நுண்ணறிவு மிகச் சுலபமாக தொழில் நுட்பத்தின் உதவியுடன் செய்து விடும் என்ற ஆபத்து இருந்து வருகிறது. மற்றொரு பக்கம் சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஒரு புதிய ஆய்வின்படி, ஒரு வாரத்தில் மனிதர்கள் ஊழியர் செய்யும் வேலையை நான்கு நாட்களில் நிறைவேற்ற உதவும் என்று வெளியிடப்பட்டுள்ளது.
AI டெக்னாலஜியைப் பயன்படுத்தி, முதல் முதல் செயற்கை நுண்ணறிவு கருவியாக chatgpt அறிமுகமானது. அதற்கு அடுத்ததாக கூகுள் பார்டு அறிமுகமானது. கூகுள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்படுத்தப்பட்ட கருவியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், சிறிய அளவிலான டெக் நிறுவனங்களும் AI கருவிகளை அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் அடானமி என்ற ஒரு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அமெரிக்கா மற்றும் யுனைடெட் கிங்டமில் வொர்க்-லைப் பேலன்ஸை மேம்படுத்த AI உதவும். இதன் மூலம் ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாள் மட்டுமே வேலை செய்தால் போதும் என்று வெளியிட்டிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துவதால் கடினமான வேலைகளை மிகச் சுலபமாக செய்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் பலருடைய வேலைகளை இது பாதிக்கும் என்று ஊழியர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். எனவே செயற்கை நுண்ணறிவு கருவியை மிகப்பெரிய அளவில் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தத் தொடங்கினால், தங்களின் வேலைக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். ஆனால், தற்போது வெளியான இந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ள விபரங்களின் படி ஊழியர்கள் தங்களுடைய பணியை சிறப்பாக செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு உதவும். ஒரு நபர், ஒரு வேலையை செய்வதற்கு நான்கு நாட்கள் எடுத்துக் கொள்கிறார் என்றால், AI அடுத்து நாட்களுக்கான வேலையை தொடர்ந்து செய்யும்.
AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் 8 மில்லியனுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் யுகேவிலும், 3 கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்க ஊழியர்களும் பலன் பெறுவார்கள் என்றும் இந்த ஆய்வு கூறியுள்ளது. தங்கள் முதலீடுகளுக்கு ஏற்ற வருமானம் வேண்டும் என்று விரும்பும் நிறுவனங்களுக்கும் இது சாதகமாக இருக்கும். ஏற்கனவே, சாட்ஜிபிடி தன்னால் எந்தவிதமான வேலைகளை எல்லாம் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கும் நிலையில் மனிதர்களும் செயற்கை நுண்ணறிவும் இணைந்து வேலை செய்யும்போது நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய சாதகமாகவும், குறைந்த செலவில் வேலைகளை செய்வதற்கும் உதவும்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments