Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு - "பொய்கள் நிறைந்தது": இஸ்ரேலியப் பிரதமர்

காஸாவில் இனப் படுகொலையில் ஈடுபட்டதாக இஸ்ரேலுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கும் தென்னாப்பிரிக்காவை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ (Benjamin Netanyahu) சாடியுள்ளார்.

அந்த வழக்கு பொய்கள் நிரம்பிய ஒரு கபட நாடகம் என்று அவர் வருணித்தார்.

தென்னாப்பிரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் ஏதுமில்லை என்று வாஷிங்டனும் கூறியது.

இஸ்ரேலின் செயல் இனப்படுகொலைக்கு எதிரான ஐக்கிய நாட்டு நிறுவனத் தீர்மானத்தை மீறும் செயல் என்றும் தென்னாப்பிரிக்கா வாதிட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு இஸ்ரேல் ஹமாஸ்மீது தொடுத்த போர் வரம்பை மீறிவிட்டதாகவும் அது கூறியது.

seithi


 



Post a Comment

0 Comments