Ticker

6/recent/ticker-posts

IND vs SA : எப்புட்றா.. வெறும் 642 பந்துகளில் முடிந்த டெஸ்ட் போட்டி.. 136 வருட வரலாற்றை மாத்திடாங்க!


கேப் டவுன்: 136 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறுகிய ஓவர்களில் முடிவடைந்த டெஸ்ட் போட்டியாக இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆட்டம் புதிய வரலாறு படைத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து தென்னாப்பிரிக்கா அணி ஆல் அவுட்டானது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

இருப்பினும் 98 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி எய்டன் மார்க்ரமின் அபாரமான சதம் காரணமாக 176 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி வெற்றிபெற 79 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இந்திய அணி 12 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது. இதன் மூலமாக டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

அதுமட்டுமல்லாமல் கேப் டவுன் மைதானத்தில் முதல்முறையாக தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. அதேபோல் இந்த போட்டி வெறும் 104 ஓவர்களில் முடிவடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் ஒன்றரை நாட்கள் மட்டுமே நடந்த டெஸ்ட் போட்டி என்பதால், விரைவில் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துவிடும் என்று ரசிகர்கள் காட்டமாக விமர்சித்து வருகின்றனர். 136 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெறும் 642 பந்துகளில் முடிவடைந்த போட்டி இதுதான். இதற்கு முன்பாக 1932ஆம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி 656 பந்துகளில் முடிவடைந்ததே சாதனையாக இருந்தது. அதற்கு முன் 1935ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி 672 பந்துகளிலும், 1888ஆம் ஆண்டு இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி 788 பந்துகளிலும், அதே ஆண்டில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதிய ஆட்டம் 792 பந்துகளில் முடிவடைந்தது.

2021ஆம் ஆண்டு அகமதாபாத் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டம் 140 ஓவர்களில் முடிவடைந்த போது சர்வதேச கிரிக்கெட் ஊடகங்கள், இந்திய அணி ஸ்பின்னுக்கு சாதகமாக பிட்ச் அமைத்து டெஸ்ட் கிரிக்கெட்டை அழிப்பதாக விமர்சித்தன. ஆனால் இன்று தென்னாப்பிரிக்காவில் 642 பந்துகளில் முடிவடைந்த டெஸ்ட் போட்டி குறித்து அனைத்து நாடுகள் அமைதியாக இருப்பதாக இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

mykhel


 



Post a Comment

0 Comments