
நமது உடலை பல நுண்ணுயிரிகள் சேர்ந்து இயக்கிக் கொண்டிருக்கின்றன. அதில் அதிகம் நுண்ணுயிரிகள் வாழக்கூடிய ஒரு பகுதி தான் நமது குடல். அந்தக் குடலில் தீய நுண்ணிய உயிர்களும் இருக்கின்றன நல்ல நுண்ணுயிரிகளும் இருக்கின்றன.
நுண்ணியிரிகள் நமது உடலுக்கு கேடு செய்யவும் நல்ல நுண்ணுயிரிகள் நமது உடலுக்கு நன்மை பயக்கவும் செய்கின்றது.
சரி நல்ல நுண்ணுயிரிகளை பெருக்குவது தயிர், அதிகம் புளிக்காத உணவுகள் உதாரணமாக தோசை மாவு, இட்லி மற்றும் பச்சை காய்கறிகள் போன்றவை உபயோகப்படுத்துவது நல்ல நுண்ணுயிரிகளை வளர்கின்றது.
நமது உடல் சீர்கெட்டு போவதற்கு கெட்ட நுண்ணுயிரிகளே காரணம்
நுண்ணுயிரிகளை எவ்வாறு நமது உடலில் இருந்து வெளியாக்குவது என்பதை குறித்த ஒரு அலசல் தான் இந்த கட்டுரை.
நம்குடலில்புழுக்கள்அதிகம் உள்ளதுஎன்பதை எப்படி கண்டறிவது?
அதற்கான வீட்டு வைத்தியம் என்ன?
குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது… குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும். குடல் புழுக்களை குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நீக்க வேண்டியது அவசியமாகும். குடல் புழுக்கள் வயிற்றில் வளர தொடங்கினால் குறைந்தது ஆறு மாதங்கள் வரையாவது வளரும் தன்மை கொண்டது.
குடல் புழுக்களை குழந்தைகளுக்கு நீர்ம மருந்து கொடுப்பதாலும், பெரியவர்களுக்கு புழுவை நீக்கும் மாத்திரைகளை சாப்பிடுவதாலும் நீக்க முடியும். ஆனால் இது போன்ற மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவது கூடாது. இதனை சாப்பிடும் போது மருத்துவர் பரிந்துரை என்பது மிகவும் அவசியமாகிறது. அதுமட்டுமின்றி இது போன்ற மாத்திரைகள் கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுவது இல்லை.

குடல் புழுக்கள் வந்த உடன் அழிப்பதற்கு பதிலாக அவை வயிற்றில் சேராமல் பாதுக்காத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. குடல் புழுக்களை அழிக்க சில இயற்கையான காய்கறிகளும், இயற்கை மருந்துகளும் உள்ளன. உடலுக்கு எந்த விதமான தீங்கும் இன்றி குடல் புழுக்களை நீக்கிவிடும் தன்மை கொண்டது. இந்த பகுதியில் குடற்புழுக்கள் எதனால் உண்டாகின்றன, அவை வராமல் பாதுகாக்க என்னென்ன வழிகள் உள்ளன.. அவற்றை போக்க உதவும் வைத்தியங்கள் பற்றியும் விரிவாக காணலாம்.
அறிகுறிகள்
வயிற்றுப்போக்கு,
மிகுந்த சோர்வு,
குமட்டல்,
மலக்குடல் எரிச்சல்,
திடீர் உடல் எடை குறைவு
இரத்த சோகை
சத்துக் குறைபாடு
செரிமானக் கோளாறுகள்
அலர்ஜி
மலச்சிக்கல்
குடல் புழுக்கள் வரகாரணம்?
அசுத்தமான சுற்றுப்புறம்தான் குடல்புழுத் தொல்லைக்கு அடிப்படைக் காரணம். குறிப்பாக, தெருவோரங்களைத் திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் தொல்லை அடிக்கடி வருகிறது. அசுத்தமான தெருவில், மண் தரையில், தண்ணீரில் குழந்தைகள் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, காலில் செருப்பு அணியாமல் நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தத் தவறுவது ஆகியவை குடல்புழு ஏற்படுவதற்குத் துணைபோகின்றன.
குழந்தைகளுக்கு
சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவு மூலமும் இது ஏற்படுகிறது. குழந்தைக்கு மண் உண்ணும் பழக்கம் இருந்தால் குடலில் புழு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சமையலுக்கு முன்பு காய்கறிகளைக் கழுவிச் சுத்தம் செய்யத் தவறினாலும், குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
கழிப்பறை சுத்தம்
சுயசுத்தம் காக்கப்பட வேண்டும். சுற்றுப்புறச் சுகாதாரம் மேம்பட வேண்டும். குளிப்பறை மற்றும் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். திறந்தவெளிகளையும் தெருவோரங்களையும் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக் கூடாது. கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். குழந்தைகளையும் இவ்வாறு செய்வதற்குப் பழக்கப்படுத்துங்கள்.
சுத்தம்
சகதி, சேறு உள்ள அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக் கூடாது. சுத்தமான இடங்களில் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள். நகங்களைப் பத்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும். குழந்தைகள் விரல் சூப்பக் கூடாது.
உள்ளாடைகள்
குழந்தை ஈரப்படுத்திய உள்ளாடைகளை உடனுக்குடன் மாற்றுவதும், தினந்தோறும் மாற்ற வேண்டியதும், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம். எக்காரணத்துக்காகவும் உள்ளாடைகளை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
உணவு சுகாதாரம்
ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. காரணம், மலத்திலுள்ள புழுக்களின் முட்டைகளைக் குடிநீருக்கோ, உணவுக்கோ கொண்டுவருவதில் ஈக்களுக்குப் பெரும்பங்கு உண்டு. சாலையோரக் கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.
நீரில் கழுவவும்
காய், கனிகளை உண்பதற்கோ சமைப்பதற்கோ பயன்படுத்தும் முன்பு தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். இதனால் நீங்கள் சமைக்கும், சாப்பிடும் உணவுகள் சுத்தமாகவும் நச்சுக்கள் இன்றியும் இருக்கும்.
சுத்தமான நீர்
நன்றாகக் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட உணவு வகைகளையே உண்ண வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டியது அவசியம்.
வெளியில் செல்லும் போது
காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும். அசுத்தமான குளம், குட்டை, ஏரி, நீச்சல்குளம் போன்றவற்றில் குளிப்பதையும் நீச்சலடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
புண்கள் இருந்தால்
வீட்டுக்குள் நுழைந்ததும் பாதங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும். பித்த வெடிப்பு, சேற்றுப்புண் இருந்தால் உடனே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.
இறைச்சிகள்
தரமான கடைகளில் மட்டுமே இறைச்சியை வாங்க வேண்டும். மீன், இறைச்சி போன்றவற்றை நன்றாக வேகவைத்த பின் சாப்பிட வேண்டும்.
செல்லபிராணிகள்
வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும் அதைத் தூக்கி கொஞ்சினாலோ, விளையாடினாலோ கண்டிப்பாகக் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
குடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வீட்டு வைத்தியம்
மருந்து ஒன்று
சுண்டைக்காய்ப் பொரியல்
பச்சை சுண்டைக்காயை நைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் விளக்கெண்ணெய் ஊற்றி சீரகம் வெந்தயம் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு தாளித்து நைத்து வைத்து இருக்கும் சுண்டைக்காயைப் போட்டுக் கிளறி மஞ்சள் தூள் போட்டுக் கிளறி, மிளகுத் தூள், கல் உப்புப் போட்டு பொரியல் ஆக்கி இறக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் நீங்கும்.
மருந்து இரண்டு
பாகற் காய் மசியல் கூட்டு செய்ய வேண்டும்.நாட்டு பாகற்காய் மட்டுமே பயன் படுத்த வேண்டும். பொறித்து சாப்பிட்டேன் என தம்பட்டம் அடிப்பது வீண்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் பெருங்காயம் பாகல் காய் துவரம்பருப்புடன் பூண்டு சேர்த்து வேக வைத்து எடுத்த பருப்பு மசியல் ஆகியவற்றை சேர்த்து கூட்டாக செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும்.
மருந்து மூன்று
அகத்திக் கீரை சாறு - ஒரு தேக்கரண்டி
பூண்டு சாறு - ஒரு தேக்கரண்டி
தூய தேன் - அளவாக
மூன்றையும் கலந்து தினமும் காலையில் ஒரு வாரம் மட்டும் குடித்து வர குடலில் தங்கி இருக்கும் புழுக்கள் வெளியேறும்.
மருந்து நான்கு
வாய் விடங்கம்,
ஓமம்,
மிளகு,
சுக்கு,
கறிவேப்பிலை,
கல் உப்பு
ஆகியவற்றை ஒவ்வொன்றாக பொன் நிறமாக வறுத்து ஆற வைத்து ஒன்றாக சேர்த்து அரைத்துப் பொடியாக எடுக்க வேண்டும்.
இந்த வாய் விடங்கப் பொடியை தோசை இட்லி, சோறு போன்ற உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும்.
வாய் விடங்கம் அல்லது வாய் விளங்கம் என்பது மிளகு போன்ற ஒரு பொருள் எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
மருந்து ஐந்து
சிலர் வேப்ப இலைக் கொளுந்துகளை அரைத்துக் குடிப்பர்.
கசப்பு காரணமாக சிலர் குடிக்கவும் மறுப்பார்கள்.
அப்படிப் பட்டவர்கள் கீழ்க்கண்டவாறு வேப்பிலை உருண்டைகள் செய்து விழுங்கலாம்.
வேப்பங் கொழுந்து,
கறிவேப்பிலை,
பூண்டு,
மிளகு,
ஓமம்,
சுக்கு
ஆகிய பொருட்களைத் தேவையான அளவு எடுத்து நாட்டுப் பசு நெய்யில் பொன் நிறமாக வறுத்து இறக்கி ஆற வைத்து கல் உப்பு சேர்த்து அரைத்து துவைலாக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விழுங்கி தண்ணீர் குடிக்க குடல் புழுக்கள் வெளியேறும்.
இந்தக் குறிப்புகள் அனைத்தும் மருத்துவ நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை.

நமது குடல் சுத்தம் தான் உடலில் ஆரோக்கியம் எனவே நமது குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம் வேட்டை வாசகர்களே!
மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி என்றும் நோயின்றி வாழ நலமுடன் வாழ,உங்களுடன்...

டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).
=====
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments