பூமியை போலவே உயிரினங்கள் வாழ வேற்று கிரகம்.. நாசா விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!

பூமியை போலவே உயிரினங்கள் வாழ வேற்று கிரகம்.. நாசா விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!


பூமியைப் போன்று உயிரினங்கள் வாழ மாற்று கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பூமியை போன்று உயிர்கள் வாழக்கூடிய மாற்று கிரத்தை கண்டுபிடித்துள்ளது. அதற்கு “சூப்பர் எர்த்” என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த கிரகம் சூரிய குடும்பத்திலிருந்து சுமார் 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

இது பூமியை விட ஒன்றரை மடங்கு அகலம் கொண்ட மிகப்பெரிய கிரகமாகும். இந்த கிரகம் சுற்று வட்டப் பாதையில் தன் தாய் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில், இந்த கிரகம் வெறும் 19 நாட்களிலேயே தனது முழு சுற்றுவட்டப் பாதையை சுற்றி வந்துவிடுகிறது.

அதன்படி இந்த கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது வெறும் 19 நாட்களே மட்டுமே ஆகும். இதன் மேற்பரப்பில் திரவ நீருக்கான அறிகுறிகள் இருப்பதாக நாசா ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு திரவ நீர் இருப்பது உயிரினங்கள் வாழ உகந்த ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சூப்பர் எர்த் ஒரு சிறிய சிவப்பு நிற நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகவும் அதற்கு அருகிலேயே பூமி அளவிலான மற்றொரு கிரகம் கூட இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வானியல் அளவு கோலின்படி, ஓரளவுக்கு பூமிக்கு அருகிலேயே உள்ளது என சொல்லலாம்” எனவும் கூறியுள்ளது.

news18


 



Post a Comment

Previous Post Next Post