இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்!

இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்!


இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்  என்பது இறைத்தூதர் முகம்மது நபி(ஸல்) அவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்றாகும். இது கி.பி. 621 இல் ஒரே இரவில் நிகழ்ந்த இரவுப் பயணமாகும். இது உடல் மற்றும் உள ரீதியான ஆன்மீகப்பயணமாகும்.

மிஸ்கீன் ஹாபிழ் காரீ மு. முஹம்மது இத்ரீஸ் அப்துற்றஹ்மான் கௌஸி காதிரீ ரிஃபாஈ M.SC..M.A..P.HD  தனது தொகுப்பொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:-

'யாராவது ரஜப் மாதம் 27 அன்று நோன்பு வைத்தால் அவருக்கு அல்லாஹ் 60 ஆண்டுகள் நோன்பு வைத்த கூலியை கொடுப்பான். அத்தினத்தில்தான் அண்ணல் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிப்பட்டத்தை வழங்கினார்கள்.' ஜுஸ்உ அபீ முஆத் என்ற நூலில் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக இந்த நபிமொழி பதிவு செய்யப்பட்டுள்ளது. 27வது இரவிலும், பகலிலும் செய்யப்படுகின்ற அமல்களுக்கு அடிப்படை ஆதாரமுமாகும்.

சங்கை மிஃராஜ் இரவில் இதய சுத்தியோடு ஒருவர் பின் வரும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவாரேயானால் அவர் 100 வருட வணக்க வழிபாடுகளில் அவர் ஈடுபட்டதற்கு அது சமமாகிவிடும் என அவர்கள் அறியத் தந்துள்ளார்கள்.
.
*12 ரக்கா'அத் நfபில் தொழ வேண்டும். இரண்டிரண்டு ரக்காத்தாக 06 ஸலாமில் தொழுது கொள்ளலாம்.
.
*ஒவ்வொரு ரக்'ஆத்திலும் சூரா பாத்திஹாவுக்குப் பிறகு, சூரா இஹ்லாஸ் (குல்ஹுவல்லாஹ்) அல்லது வேறு ஏதாவது சூராவை ஓதிக்கொள்ளலாம்.
.
*பிறகு 100 முறை ' ஸப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று ஓதிக்கொள்ள வேண்டும்.
.
*பிறகு 100 முறை 'அஸ்தஃபிருல்லாஹ்' என்று கூறிக் கொள்ள வேண்டும்.
.
*பின் தனக்குத் தெரிந்த ஒரு ஸலவாத்தை 100 முறைக் கூறிக் கொள்ள வேண்டும்.
.
அதன் பின் எமது சன்மார்க்கத் தேவைகளுக்காகவும் உலக தேவைகளுக்காகவும் து'ஆ செய்துக் கொள்ள வேண்டும். இன்ஷா அல்லாஹ் அவனது (பாவக் காரியங்களுக்கல்லாத) அத்தனை துஆக்களையும் அல்லாஹ் ஏற்று அருள் புரிவான்.
.
(கன்ஸுல் உம்மால், பாகம்: 12, பக்கம்: 312-313, ஹதீஸ் இல: 35170)
 


 



Post a Comment

Previous Post Next Post