சாப்பிட்டதும் வயிறு உப்புசமாவே இருக்கா, இந்த வீட்டு வைத்தியம் போதும்

சாப்பிட்டதும் வயிறு உப்புசமாவே இருக்கா, இந்த வீட்டு வைத்தியம் போதும்


வயிறு ஆரோக்கியமாக இருந்தால் தான் நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஏனெனில் பெரும்பாலான நோய் வயிற்றில் இருந்து தான் தொடங்கும். முறையற்ற உணவுப் பழக்கவழக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. வாயு, மலச்சிக்கல் மற்றும் வீக்கம் - இவை அனைத்தும் பொதுவான வயிற்று பிரச்சினைகள் ஆகும். ஆனால் இந்த ஆரம்பகால பிரச்சனைகள் கூடுதலாக அதிகரித்தால் உடல்நலத்திலும் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். குறிப்பாக வயிற்றின் வீக்கத்தைப் பற்றி பேசுகையில், இது மிகவும் ஆபத்தானது. இதனால் வயிறு எப்போதுமே வீங்கிய வண்ணமாகவும், நிரம்பியதாகவும் உணர்வீர்கள். 

இந்நிலையில் வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளால் நீங்கள் அடிக்கடி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால், இதற்கு சில வீட்டு வைத்தியங்களை நீங்கள் முயற்சிக்கலாம். அவை என்னவென்று தெரிந்துக்கொள்வோம்.

சீரகம் நன்மை தரும்
சீரகத்தை அரைத்து அதில் சிறிது கறுப்பு உப்பைக் கலந்து, உணவு உண்டபின், சிறிது வெதுவெதுப்பான தண்ணீருடன் குடித்து வந்தால் வயிறு உப்புசம் குணமாகும்.

இலவங்கப்பட்டை, மஞ்சள் மற்றும் எலுமிச்சை
இலவங்கப்பட்டை, மஞ்சள் மற்றும் எலுமிச்சை நீர் வீக்கத்தை குறைக்க உதவும். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த பானம் வயிறு உப்புசம் பிரச்சனையில் இருந்து நிவாரணம் தர உதவும். 

மசாலா டீ 
வயிறு உப்புசம் நீங்க மசாலா டீ குடிக்கலாம். இதற்கு அரை ஸ்பூன் சோம்பு, கால் ஸ்பூன் சீரகம், சிறிது இளவங்கப்பட்டை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி குடிகக்கவும். இதனால் அதிவேக நிவாரணம் கிடைக்கும்.

எலுமிச்சை 
எலுமிச்சையில் சிட்ரிக் உள்ளதால் இவை கல்லீரலில் கழிவுகளை அகற்ற உதவும், அதனுடன் செரிமான பிரச்சனையை சரிசெய்ய உதவும். எனவே வெந்நீரில் எலுமிச்சை பிழிந்து குடித்து வந்தால் உப்புசம் நீங்க உதவும்.

தயிர் 
வயிறு உப்புசமாக இருக்கும் போது தயிர் எடுத்துக்கொள்ளாம். ஏனெனில் இது செரிமானத்திற்கு சிறந்த உணவு ஆகும். தயிரில் இருக்கும் நுண்கிருமிகள், பாக்டீரியாக்களினால் குடல் மற்றும் செரிமானத்திற்கு நல்லது. வயிறு உப்புசத்திற்கு உடனடி தீர்வு தர உதவுகிறது. 

புதினா டீ
வயிறு உப்புசமாக இருந்தால் புதினா டீ குடிக்கலாம். புதினா டீ தசைகளை இலகுவாக்க உதவும். இந்தடீ செய்ய, ஒரு ஸ்பூன் காய்ந்த புதினா இலைகள் ஒரு கப் கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். பிறகு வடிகட்டி குடிக்கவும்.

இஞ்சி
இஞ்சி செரிமான பிரச்சினைகளை களைய உதவுகிறது. மேலும் அஜீரணத்திற்கு ஒரு சிறந்த முகவராக செயல்படுகிறது. இஞ்சி செரிமான மண்டலத்தில் உள்ள வாயுவை வெளியேற்ற உதவுகிறது. எனவே வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணம் போன்ற கோளாறுகள் இருந்தால் இஞ்சி டீ தேன் கலந்து குடிக்கலாம்.

zeenews


 



Post a Comment

Previous Post Next Post