பெண்ணும் ஆணும்
சரிசமம் என்றே
எண்ணும் ஆணினம்
எடுத்துச் சொன்னாலும்
பெண்ணே உன்னை
முடக்கி வைத்தால்
அளவிடற் கரிய
ஆற்றல் கொண்ட
பன்முகத் தன்மை
பாங்காய் கொண்ட
பெண்ணின் உரிமையை
பறித்து விட்டு
கண்ணாம் கல்வியை
மறுத்து விட்டு
அழகின் பெருமையை
அள்ளி விட்டு
போகப் பொருளாய்
மாற்றி விட்டு
தன் னம்பிக்கையை
தகர்த்து விட்டு
தாழ்வு மனப்பான்மையை
தவழ விட்டு
கல்வி மறுத்து
செல்வம் மறுத்து
சிந்திக்கும் ஆற்றலை
சிதற அடித்து
அண்டி வாழும்
ஒட்டுண்ணியாய்
ஆணா திக்கத்தின்
அடிமை யாக்கி
ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகள் கடந்தும்
அடுக் களைக்குள்
அடைத்து வைத்து
மழலைத் திருமணம்
செய்து வைத்து
இளம் வயதில்
இணையரை இழந்தால்
பூவும் பொட்டும்
வைக்க மறுத்து
உடன் கட்டை
ஏற வைத்து
உயிருடன் இருந்தால்
மொட்டை அடித்து
வெள்ளுடை ஈந்து
அழகைச் சிதைத்து
வாழுங் காலம்
மூலையில் அமர்த்தி
எண்ணச் சிறகை
வெட்டி முறித்து
வீட்டில் முடக்கி
புழுவாய் நடத்தும்
கூட்டை உடைத்து
வெளியே வந்தால்
கண்ணெனப் போற்றும்
கல்வியைக் கற்று
தன்னினம் தழைக்கப்
பாடு பட்டு
தற்சார்பு பெற்று
தரணி ஆளலாம்!
வண்ணத்துப் பூச்சியாய்
விண்ணில் பறக்கலாம்!
சிறகுக்குள் வானத்தை
சிறை பிடிக்கலாம்!
எழுச்சி கொண்டு
எழுந்துவா வெளியே!
வாழ்த்தும்
கோ.இமயவரம்பன்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments