“புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை நாங்கள் உருவாக்குவதில் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம்”என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு உலகின் பல நாடுகள் தீவிர முயற்சில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் புற்றுநோய்க்கு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ரஷ்யாவும் ஈடுபட்டு வருகிறது.
மொஸ்கோ மன்றத்தில் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசுகையில் அவர் அதனை தெரிவித்தார்.
மேலும் இது குறித்து தெரிவித்த அவர், புதிய தலைமுறையின் புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் Immunomodulatory மருந்துகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
இதன் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும். அவை தனிப்பட்ட சிகிச்சை முறைகளாக திறம்பட பயன்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா கொரோனா தொற்றின்போது ஸ்புட்னிக் தடுப்பூசியை உருவாக்கியதோடு உலக நாடுகளுக்கு விற்றமை குறிப்பிடத்தக்கது.
ibctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments