தரம்சாலா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 218 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. இதையடுத்து இந்திய அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 473 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் 3வது நாள் ஆட்டத்தை குல்தீப் யாதவ் - பும்ரா கூட்டணி தொடங்கியது.
இன்றைய ஆட்டத்தில் 4 ரன்கள் மட்டுமே கூடுதலாக சேர்த்த நிலையில், 477 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆல் அவுட்டாகியது. இதனால் முதல் இன்னிங்ஸிலேயே இந்திய அணி 259 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அஸ்வின் சுழலில் சிக்கி டக்கெட் 2 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து கிராலி டக் அவுட்டாகியும், போப் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த பேர்ஸ்டோவ் அதிரடியாக 39 ரன்கள் சேர்த்த நிலையில், குல்தீப் யாதவ் பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் மீண்டும் அஸ்வின் அட்டாக்கில் வர, பென் ஸ்டோக்ஸ் 2 ரன்களிலும், பென் ஃபோக்ஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 113 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. தொடர்ந்து ஸ்பின்னர்களை ரூட் மற்றும் ஹார்ட்லி இருவரும் எந்தவித சிரமமும் இன்றி எதிர்கொண்டனர்.
இதனையறிந்து பும்ரா பந்தை கையில் எடுத்தார். அவரின் முதல் ஓவரிலேயே ஹார்ட்லி 20 ரன்களிலும், மார்க் வுட் டக் அவுட்டாகியும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோ ரூட் ஒருமுனையில் நின்று அதிரடியாக அரைசதம் விளாசினார். சில மணி நேரம் ஜோ ரூட் தாக்கு பிடித்த நிலையில், குல்தீப் யாதவ் பந்தில் 84 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியாக இங்கிலாந்து அணி 195 ரன்களில் ஆல் அவுட்டாகியது. இதன் காரணமாக இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
அதேபோல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. குறிப்பாக பேஸ் பால் அணுகுமுறையுடன் இந்திய மண்ணில் இங்கிலாந்து அணியால் என்ன மாற்றத்தையும் செய்ய முடியாது என்று உலகிற்கு நிரூபித்து காட்டியுள்ளது. இந்த இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
mykhel
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments