உலகின் பல பகுதிகளிலிருந்து பெண்கள் போர்ச்சுகலில் கூடினர்...
வேண்டுமென்றே நிலத்தைக் கொளுத்திவிட...
ஆச்சரியமாக இருக்கலாம்... ஆனால் காட்டுத்தீ ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான பாரம்பரிய முறைகளில் அதுவும் ஒன்று.
பரடேஸ் டி கூரா (Paredes de Coura) என்ற ஊரில் கூடிய அந்தப் பெண்கள் காய்ந்த புதர்களை எரித்தனர்.
அந்தப் பகுதியைப் பின்னர் கால்நடைகளை மேயவிடப் பயன்படுத்தலாம்.
காட்டுத்தீயைக் காட்டிலும் இதுபோன்ற கட்டுப்படுத்தப்பட்ட தீயால் பூமிக்கு ஏற்படும் தீங்கு குறைவு என்று ஒரு நிபுணர் தெரிவித்தார்.
20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 பேர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பருவநிலை மாற்றத்தால் போர்ச்சுகல் உட்பட ஐரோப்பாவில் காட்டுத்தீச் சம்பவங்கள் மோசமாகி வருகின்றன.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments