Ticker

6/recent/ticker-posts

கடலில் இருந்து 1800 மீட்டர் உயரம்... குகைக்குள் அமைந்திருக்கும் கிராமம்... எங்கு இருக்கிறது தெரியுமா?


வெளி உலகத்துடன் பெரிதும் தொடர்பு இல்லாமல் குகைக்குள் ஒரு சிறிய கிராமமே இருக்கிறது. அவர்களுக்கான அடிப்படை வசதிகள், கல்வி, வீடு மற்றும் கல்வி ஆகியவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சீனாவில் Guizhou மாகாணத்தில் உள்ள ஜாங்டாங் என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய மலையின் குகையில் சுமார் 100 பேர் கொண்ட சிறிய கிராமம் இருக்கிறது.

சீனாவின் குகை கிராமம் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் சுமார் 18 குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்களுக்குக்கான சரியான அடிப்படை வசதிகள் கிடையாது.

இப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரத்தில் இருப்பதால், இங்கு இருக்கும் மக்கள் வெளி உலகத்துடன் தொடர்பு ஏற்படுத்திகொள்ளுவதில் பெரும் சிரமம் இருக்கிறது.

இந்த குகைக்குள் வாழும் குழந்தைகளுக்கு பள்ளி, இங்கேயே அமைக்கப்பட்ட செயல்பட்டு வந்தது. ஆனால், 2008 ஆம் ஆண்டு சீனா அரசு, குகைக்குள் வாழ்வதற்கு தடை விதித்தது. குகை மனிதன் போல் வாழும் முறை சீனாவில் இருக்கக்கூடாது என இந்த கிராமத்தில் இருந்த பள்ளி மூடப்பட்டது.

மேலும், குகையை விட்டு வெளியேற கிராம மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தங்கள் வாழும் இடத்தை விட்டு வெளியேறமாட்டோம் என இங்குள்ள மக்கள் பிடிவாதமாக இருக்கின்றனர்.

1949 ஆம் ஆண்டு சீனாவில் நடத்த உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில் மலைப்பகுதியில் இருக்கும் மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள இந்த குகையில் குடியேறியுள்ளனர். அதனைத்தொடர்ந்து, பல காலக்கட்டமாக அங்கேயே வாழ்ந்துவரும் இவர்கள், தங்களுக்கான வீடு, விவசாயம் போன்றவற்றை உருவாக்கியுள்ளனர்.

கடுமையான குளிர் மற்றும் வெப்பத்தின் இருந்து இப்பகுதி அவர்களை பாதுகாப்பதாகவும், இன்னல்களுக்கு நடுவிலும் இங்கேயே வாழ்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.

குகையில் இருந்து பள்ளி நிறுத்தப்பட்டதால், இங்குள்ள மாணவர்கள் 2 மணி நேரம் கடந்து சென்று அருகில் உள்ள கிராமத்தில் கல்வி பயின்று வருகின்றனர். 2000 ஆம் ஆண்டிற்கு பின்னரே இங்கு மின்சார வசதி கொண்டுவரப்பட்டது. இங்குள்ள மாணவர்கள் மேற்படிப்பிற்காக வெளியூர்களுக்கு சென்றும் படிக்கின்றனர்.

இந்த காலக்கட்டத்திலும், வசதிகள் இல்லாத குகையை விட்டு மக்கள் வெளியேறாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஊடகங்களின் பார்வை மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகையினால் இந்த குகைக் கவனத்தை ஈர்த்துள்ளது.

news18


 



Post a Comment

0 Comments