இந்த 5 உணவுகளை காலையில் மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்… மீறி சாப்பிட்டா?

இந்த 5 உணவுகளை காலையில் மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்… மீறி சாப்பிட்டா?


இன்றைய காலத்தில் ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பது பலருக்கு பொதுவான இலக்காக உள்ளது. காலையில் நாம் உட்கொள்ளும் உணவுகள் நமது எடைப் பராமரிப்பில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. காலை உணவு பெரும்பாலும் அன்றைய மிக முக்கிய உணவாக இருப்பதால், நமது உடல் எடையைப் பராமரிக்க இதை கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டியது அவசியம். நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறீர்கள் அல்லது ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க விரும்புகிறீர்கள் என்றால், காலையில் எதுபோன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 

1. கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகள்: காலை உணவாக மக்கள் எடுத்துக் கொள்ளும் பெரும்பாலான உணவுகளில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளன. இவற்றை காலை நேரத்தில் உட்கொண்டால் ரத்த சர்க்கரை விரைவாக அதிகரிக்கச் செய்யும். மேலும் இவற்றை சாப்பிடுவதால் உங்களுக்கு கூடுதல் பசி எடுக்கும் என்பதால், மேலும் அதிகமாக சாப்பிட்டு எடை அதிகரிக்க வழிவகுத்துவிடும். எனவே காலையில் முழு தானியங்கள், முட்டை, தயிர், ஓட்ஸ் போன்ற புரதம் நிறைந்த உணவுகளைத் தேர்வு செய்யுங்கள்.  

2. இனிப்பு பானங்கள்: காலை வேளையில் பழச்சாறுகள், கூல் ட்ரிங்க்ஸ் மற்றும் எனர்ஜி ட்ரிங்ஸ் போன்ற இனிப்பு பானங்களைக் குடிப்பதால் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இத்தகைய பானங்களில் பெரும்பாலும் கலோரி அதிகம் இருப்பதால், குறைவாகக் குடித்தாலும் உங்களது உடல் எடையை நிர்வகிப்பது கடினமாகிவிடும். எனவே இவற்றிற்கு பதிலாக தண்ணீர், மூலிகைத் தேநீர், பிளாக் காபி போன்றவற்றை காலை பானங்களாகத் தேர்ந்தெடுங்கள். 

3. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்: பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் அதிக அளவில் உள்ளன. இதை அவ்வப்போது காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரித்து சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே காலையில் நீங்கள் மாமிசம் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் கோழி, மீன் போன்றவற்றை கடையில் வாங்கி நீங்களே சமைத்து சாப்பிடுங்கள்.

4. நூடுல்ஸ்: நூடுல்ஸ் உணவு பலருக்கு விருப்ப உணவாக இருந்தாலும் அதை காலையில் காலையில் சாப்பிடுவது ஆரோக்கியமானது கிடையாது. இதில் பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட மாவுகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் அதிக சோடியம் இருப்பதால், எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். 

5. எண்ணெயில் வறுத்த தின்பண்டங்கள்: காலையில் சமோசா பக்கோடா மற்றும் வடை சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும், அவற்றில் அதிக கலோரிகள் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருக்கும். இத்தகைய தின்பண்டங்கள் நமக்கு ஊட்டச்சத்தை வழங்கினாலும் எடை அதிகரிக்க வழிவகுக்கும். இவற்றிற்கு பதிலாக இட்லி, தோசை போன்ற ஆரோக்கியமான முறையில் வேகவைத்த உணவுகளை காலை வேலையில் சாப்பிடலாம். 

kalkionline


 



Post a Comment

Previous Post Next Post