
வைராக்கியம் அற்ற, இயலாமையின் போது பிரதிபலன் அடையாத , மனிதநேயம் மற்றும் அன்பு, பாசம் , நேசம் ஒன்றினைந்த ஓர் அழகிய மனிதனின் பிரிவை முன்னிட்டுவெளியிடும் ஓர் சமர்ப்பணம்....
இவ்வுலகில் பிறக்கின்ற அனைவரும் ஓர் நாள் இறப்பதென்பது உண்மயான சத்தியமாகும்....
இதற்கு முரணான எந்த கருத்தும் எந்த மதமோ , மார்க்கமோ காட்டியது கிடையாது.
அனைத்து மதங்களும் இதனை முன்வைக்கும் முகமாகவே சமூகமயப்படுத்தப்பட்டது.
" ஜீவிதஃ அனியதஃ மரணஃ நியதஃ "எனும் புத்தரின் போதனைக்கு அமைவாகவும்
" குல்லு நப்சின் தா இகதுல் மவ்த் "எனும் பரிசுத்த அல் குர்ஆனின் போதனைக்கு அமைவாகவும் உலகின் அனைத்தும் நித்சியம் அற்றது என்ற உண்மையை உணர்ந்து உலக வாழ்வை திட்டமிடல் மனிதனின் பொறுப்பாகும்.
இந்த உண்மையை உணர்ந்த மிக அபூர்வமான ஓர் சிறந்த மனிதர் சில நாட்களுக்கு முன்னர் தேசத்திற்கும், மக்களுக்கும் விடை கொடுத்து பிரிந்து சென்றது தமது இறுதி சடங்குகளை கூட தம்மால் தயார் செய்து முடித்துவிட்டுதான் .

எமது பணிக்காக எமது வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற பெரும்பாலானவர்கள் எவ்வித கவலையும், அச்சமும் இன்றி தமது பொறுப்பினை மாசுபடுத்தி சீரழிக்கும் வேலையில் எமக்காக எமதொருவர் எனும் உணர்வுடன் தெருவில் இருந்த பாராளுமன்றம் வரைக்கும் சில வேளைகளில் ஓர் வீரனாகவும் இன்னும் சில வேளைகளில் சேட்டை செபவனாகவும் முன்னின்று மோசடி, வஞ்சகம், இனவாதம், மதவாதம் போன்ற கீழ் தரமான கொள்கைகளுக்கு எதிராக மனித நேயத்துடன் உண்மையாகவே செயல் பட்டு கலம் இரங்கியதால் அவர் முகம் கொடுத்த எதிர்ப்புக்களும் , சவால்களும் , விமர்சனமங்களும் எல்லையற்றதாகும்.
ஆனாலும் இந்த எந்த சந்தர்ப்பத்திலும் பின்னோக்கி செல்லாது நாம் கொடுத்த விருப்பு வாக்குகளுக்கு உரிய மதிப்பை தந்த ஓர் பாராளுமன்ற உறுப்பினராகவும் , ஓர் இராஜாங்க அமைச்சராகவும் வெறுப்பின்றி குறிப்பிடமுடிந்த ஓர் மனிதர் தான் தாங்கள் கெளரவ பாலித தெவரப்பெரும சகோதரரே....!
இயற்கை மனிதர்களை துரத்தி துரத்தி வேட்டையாடிய சுனாமி , வெள்ளப்பெருக்கு, கொரோனா வைரஸ், போன்ற பலதரப்பட்ட இயற்கை அர்த்தங்களின் போது பெரும்பாலான பொறுப்பு வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வாழ்க்கை, தம் குடும்பத்தின் வாழ்க்கை, தமது உறவினர்களின் வாழ்க்கை என்ற தோரணையில் சந்தர்ப்பவாத கொள்கையை கையாண்டு மெளனம் காத்த போது எனது மக்கள் , எனது உறவுகள் எனது ஜாதி என்ற பொதுவான நோக்கத்தில் களம் இறங்கி தமது சொத்து செல்வங்களை கூட ஏழைகளின் நலனுக்காக தியாகம் செய்து பசித்தோதோரின் பசியை போக்குவதற்கும் துன்பப்ட்டோரின் துயரம் தீர்ப்பதற்கும் செயல் பட்ட ஓர் தியாகியாக தாங்களை இனம் காணலாம்
முழு தேசத்தவர்களும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல் உங்கள் இருதி சடங்கிள் பங்குகொள்வதற்கு இந்த மனித நேயம் தான் அடிப்படையாக அமைந்தது.
அன்று எமக்காக தாங்கள் களம் இறங்கியது போல் இன்று உங்களுக்காக நாம் நன்றி உணர்வோடு புறப்பட்டோம்.
அதுமற்றுமின்றி தாங்கள் எந்த மததின் நூடாக உங்கள் இறுதியை சந்திக்கின்ரீர்களோ சமூக நலனிற்காக பாடுபட்ட ஓர் புனிதமானவர் என்பதற்காக அவ்விடத்தில் நாம் உங்களுக்காக சாற்சியாளர்களாக நிற்போம்.
உங்கள் கண்களால் இதனை பார்க்க முடியாவிட்டாலும் உங்கள் இதயம் உங்களுக்கு இதனை உணர்த்தும் அன்புள்ள தோழரே...
நாடு போற்றும் ஓர் புனிதரை...
நாடு இழப்பது தீர்க்க
முடியாத இழப்பாகும்
மண்ணிலே.......
மீதமானோர்க்கு நீங்கள்
காட்டிய முன்மாதிரி
பெறும் சொத்தாகும் தோழா
இம் மண்ணிலே....
இனியாவது சீர் பெறுவோம்
பாலிதவின் வழிகாட்டலில்
சீர் பெற்று இம் மண்ணிலே....
இல்லாவிடின் விட்டுச் செல்லுங்கள்
இன்னும் கட்டிக்காக்காமல்
உங்கள் பொறுப்புக்களை
இம் மண்ணிலே....
( அன்பு மிகுந்த சேசத்தின் துரைச்சாந்தோரே....!அனைவரும் ஒன்றிணைந்து கட்டிக் காப்போம் பாலிதவின் மீதமான சமூக நற்பணியினைதார்மீக நோக்கோடு )
M.H.M நியாஸ்
தலைவர்
மீடியா லின்க்
( சமூக அபிவிருத்திக்கான தொடர்பாடல் மையம் )

மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)





0 Comments