
நீங்கள் லெமூரியா என்ற பெயரை கேள்வி பட்டிருக்கீர்களா?, பெரும்பாலானோர் கேள்வி பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்த கண்டம் இந்தியாவில் உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி அங்கு பேய்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உண்மையாகவே இப்படி ஒரு கண்டம் இருக்கிறதா?, அதில் பேய்கள் இருக்கிறதா? என்பதை பார்ப்போம்.
லெமூர் என்ற குரங்கு இனத்தை குறித்து கேள்வி பட்டிருப்பீர்கள். இவை ஆப்ரிக்காவை சேர்ந்த குரங்கு வகை. இவை மடகாஸ்கர் தீவுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த தீவு கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்காவுக்கு மத்தியில் அமைந்துள்ளது. மடகாஸ்கரில் லெமூர் குரங்குகளின் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை எப்படி ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்தன?, எப்படி கடலை தாண்டின, லெமூரியாவுக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இந்தியாவுக்கும், மடகாஸ்கருக்கும் இடையே ஒரு தீவு இருந்ததாகவும் அந்த தீவு வழியாக லெமூர் குரங்குகள் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த கண்டத்திற்கு பெயர் தான் லெமூரியா எனவும் கூறப்படுகிறது. இந்திய பெருங்கடலில் தண்ணீர் அதிகரித்ததன் காரணமாக நீரில் மூழ்கி லெமூரியா கண்டம் மறைந்துப்போய்விட்டதாக கடந்த 1864 ஆம் ஆண்டு ஸ்க்லாட்டர் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்தார். ஆனால் அதற்கான ஆதாரம் எதுவுமில்லை.
இதேபோல கடந்த 1870 ஆம் ஆண்டு ஜெர்மன் புவியியலாளர் எர்ன்ஸ்ட் ஹேக்கல் தனது வாதத்தை முன்வைத்தார். அதன்படி நமது முன்னோர்கள் லெமூரியா கண்டத்திலிருந்து வந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால் அதற்கான ஆதரம் எதுவுமில்லை. ஆதி மனிதன் ஆப்ரிக்காவிலிருந்து வந்ததாக சார்ல்ஸ் டார்வின் கூறிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த எர்ன்ஸ்ட் ஹேக்கல், ஆதி மனிதன் லெமுரியாவில் இருந்து வந்திருக்க கூடும் என வாதிட்டார்.
இதனை தொடர்ந்து 1904-ல் ஸ்காட்-எலியட் என்பர் புதிய வாதத்தை முன்வைத்தார். 15 அடி உயரத்தில் கருப்பு நிற தோலுடன் பறவை போன்ற கண்களை உடைய மனிதன் லெமுரியா கண்டத்தில் வாழ்ந்ததாக அவர் கூறினார். அவர்களுக்கு பின்னால் நடக்கும் திறன் இருந்ததாகவும் அவர்கள் தான் நமது முன்னோர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
லெமூரியா கண்டம் குறித்து தமிழ் இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 15 ஆம் நூற்றாண்டுகளில் லெமூரியா கண்டம் குமரி கண்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தமிழ் இனத்தின் ஆதி மனிதன் லெமூரியா கண்டத்தில் இருந்து வந்ததாகவும் அவர்களது முன்னோர்கள் அங்கு வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

லெமூரியா கண்டம் கடலில் மறைந்த பிறகு அது நீல திமிங்கலங்கள், டால்பின்களுக்கு வீடாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையே நிலத்தட்டுகள் ஒரே மாதிரி உள்ளன. அவற்றின் மதிப்பீட்டின்படி இந்த இரண்டு நாடுகளும் ஒரு பெரிய கண்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தன.
இவை 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டன. இந்நிலையில் லெமுரியா என்ற ஒரு கண்டம் இருந்ததா, இல்லையா என்பது புதிரானது. ஆனால் தற்போது அதுபோன்ற ஒரு கண்டம் இல்லை என்று கூறுகின்றனர்.
news18

மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments