
ஜோர்டானிலிருந்து உதவிப் பொருள்களுடன் காசா நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட இரக்கமற்றத் தாக்குலுக்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மனிதாபிமான உதவிப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களின் உரிய பாதுகாப்பை உறுதி செய்வதில் தோல்வி கண்டதற்கு இஸ்ரேலிய அரசாங்கம் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று வெளியுறவு
அமைச்சு, விஸ்மா புத்ரா வலியுறுத்தியுள்ளது.
பாதுகாப்பான பயணத்தை உறுதிச் செய்யத் தவறிய இஸ்ரேலின் நடவடிக்கை, அனைத்துலகச் சட்டம் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் தனக்குள்ள பொறுப்பை அந்நாடு அலட்சியப்படுத்தியதைப் புலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று விஸ்மா புத்ரா கூறியது.
இஸ்ரேல் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இஸ்ரேலிய அரசாங்கம் சிறிதும் பொருட்படுத்தவில்லை என்றும் விஸ்மா புத்ரா அந்த அறிக்கையில் குறிப்பிட்டது.
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு எதிரான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் அனைத்துலகச் சமூகத்திற்கு கடப்பாடு உள்ளது என்றும் அது தெரிவித்தது.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)




0 Comments