காலையில் நீங்கள் செய்யும் சில தவறுகள் உங்களின் உடல் எடையை அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

காலையில் நீங்கள் செய்யும் சில தவறுகள் உங்களின் உடல் எடையை அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


இன்று பெரும்பாலான நபர்கள் காலையில் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். சாப்பிட நேரம் இல்லை என்று காரணத்தை கூறி இவ்வாறு செய்து வருகின்றனர்.

ஆனால் உடலில் பல உபாதைகளை ஏற்படுத்தும் என்பதையும், காலையில் சாப்பிடாமல் இருந்தால் என்ன பிரச்சினை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

இரவு தூங்கி காலையில் கண்விழிக்கும் போது உடலும், மனதும் ஆற்றல் இல்லாமல் இருக்கும் நிலையில், காலையில் சாப்பிடுவது உடலில் க்ளுகோஸ் அளவை அதிகரித்து, மூளையும், உடலும் ஆற்றலுடன் காணப்படும். 

காலையில் எழுந்தவுடன் சாப்பிடுவதால் உங்கள் மெட்டபாலிச சத்துகள் அதிகரிக்கும். காலையில் சிற்றுண்டியை எடுத்துக்கொள்ளவில்லை என்றால், அன்றைய நாளை எதிர்கொள்வதற்கான மெட்டபாலிச சத்து, உங்கள் உடலில் குறைந்து காணப்படும். இதனால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களால் அது முடியாமல் பாேகலாம்.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நினைத்தால் காலை சிற்றுண்டியை கண்டிப்பாக தவிர்க்க கூடாது. காலை உணவை சரிவர, சரியான அளவில் சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு நோய் வராமல் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து காலை உணவில் கிடைக்கின்றது. ஆதலால் காய்கறிகள், மொத்த தானியங்கள் மற்றும் மெல்லிய புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லதாகும்.

உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் காலை உணவை கட்டாயம் தவிர்க்காமல் இருக்க வேண்டும். காலை உணவை தவிர்ப்பவர்கள் பெரும்பாலும் கூடிய எடையுடனும், தொப்பையுடனும் இருப்பதாகவும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி ஒன்று தெரிவித்திருக்கிறது.

manithan

Post a Comment

Previous Post Next Post