Ticker

6/recent/ticker-posts

Ad Code



மாமியாரை காதலித்த மருமகன்-மாமனாரே திருமணத்தை நடத்தி வைத்த வினோதம்! என்னடா நடக்குது இங்க?


காதல், மனிதனுக்கு எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் வரலாம் என்பதை கேள்வி பட்டிருக்கிறாேம். ஆனால் அவை அனைத்தும் சமூகத்தின் பார்வையில் சரியானவையாக இருக்குமா? இதனை பிறர் ஏற்றுக்கொள்வார்களா என்ற எண்ணம் பல சமயங்களில் சிலருக்கு தோன்றலாம். அப்படி, பலரை “என்ன கொடுமை சரவணன் இது..” என பேச வைத்துள்ளது. அது என்ன சம்பவம்? இங்கு முழு விவரத்தை பார்ப்போம். 

பீகாரில் வினோதம்:

பீகாரில் உள்ள பாங்கா நகரை சேர்ந்தவர், சிக்கந்தர் யாதவ். இவரது மனைவி, சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்திருக்கிறார். இதையடுத்து, இவர் தனது மனைவியின் தந்தை திலேஷ்வர் தார்வே உடனும் தாய் கீதா தேவியுடனும் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்துள்ளார். இதில், திலேஷ்வருக்கு 55 வயதும், அவரது மனைவியாக இருந்த கீதா தேவிக்கு 45 வயதும் ஆகின்றது. ஒன்றாக தங்கியிருந்த சமயத்தில் சிக்கந்தருக்கும், அவரது உயிரிழந்த மனைவியின் தாயார் கீதா தேவிக்கும் நெருக்கும் ஏற்பட்டிருக்கிறது. 

இவர்களின் நெருக்கத்தை பார்த்த கீதா தேவியின் கணவர், இவர்களுக்குள் ஒருவேளை தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் கொண்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் துருவி துருவி விசாரித்ததை அடுத்து, ஒரு முறை இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளார். இதனை, திலேஷ்வர் ஊர் பஞ்சாயத்தாரிடம் தெரிவித்துள்ளார். இந்த பஞ்சாயத்து கூட்டத்தில், கிராமத்தார் முன்னிலையில் தனது மாமியார் மீது தான் காதலில் விழுந்ததாக சிக்கந்தர் யாதவ் வெளிப்படையாக கூறியிருக்கிறார். 

இருவருக்கும் திருமணம்!

சிக்கந்தரின் பேச்சை கேட்ட பஞ்சாயத்தினர் அவரின் சம்மதத்துடனும் கீதா தேவியின் சம்மதத்துடனும் இருவருக்கும் அனைவர் முன்னிலையிலும் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். பஞ்சாயத்தில் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றது மட்டுமன்றி இருவரும் சட்டப்படி நீதிமன்றத்திலும் திருமணம் நடைப்பெற்றிருக்கிறது. இதனை, கீதா தேவியின் முதல் கணவர் திலேஷ்வரே நடத்தி வைத்திருக்கிறார். திருமணம் முடிந்த பின்னர், அனைவர் முன்னிலையிலும் கீதா தேவியை அவரது முன்னாள் மருமகன், அதாவது தற்போதைய கணவர் சிக்கந்தர் அவருடைய இல்லத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார். 

வினோதமான காதல் கதை…!

பீகாரில், பல்வேறு வினோதமான விஷயங்கள் நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மாமியாருக்கும்-மருமகனுக்கும் சொந்த மாமனாரே திருமணம் நடத்தி வைத்திருக்கும் சம்பவம், அந்த ஊர் மக்களை தாண்டி, பல்வேறு தரப்பினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியருக்கிறது. இதை பார்த்த நம்ம ஊர் நெட்டிசன்கள் சிலர், இந்த செய்தியை குறிப்பிட்டு ‘என்னடா நடக்குது இங்க’ என மீம் போட்டு வருகின்றனர். 

zeenews


 



Post a Comment

0 Comments