சொர்க்கத்தில் இடம் வேண்டுமா? சதுர மீட்டர் 100 டாலர்தான்!? - பிளாட் போட்டு விற்கும் தேவாலயத்தால் அதிர்ச்சி

சொர்க்கத்தில் இடம் வேண்டுமா? சதுர மீட்டர் 100 டாலர்தான்!? - பிளாட் போட்டு விற்கும் தேவாலயத்தால் அதிர்ச்சி


சொர்க்கத்தில் ஒரு சதுர மீட்டர் 100 டாலர் என விலை நிர்ணயம் செய்து, தேவாலயம் ஒன்று விற்பனை செய்து வருவது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பூமிக்கு அடுத்ததாக, நிலவில்தான் மனிதன் குடியேறுவான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். எனவே, அதற்கென்று இருக்கும் இணையதளத்திற்கு சென்று பலரும் தங்களது பெயரில் நிலவில் பிளாட் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதைவிட ஒரு படி மேலே போய்விட்டது மெக்சிகோவில் இருக்கும் ஒரு தேவாலயம்.

ஆம்! வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் இக்லேசியா டிஎம் போஸ் என்ற பெயரில் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயம் சார்பில், சமூகவலைதளங்களில் வினோதமான விளம்பரம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதில், இறந்தவர்கள் நேரடியாக சொர்க்கத்துக்கு செல்ல வேண்டும் என்றால், அவர்களது பெயரில் சொர்க்கத்தில் இடம் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. அதாவது, கடந்த 2017ஆம் ஆண்டு கடவுளை இந்த தேவாலயத்தின் பாதிரியார் சந்தித்ததாகவும், அப்போது சொர்க்கத்தில் நிலத்தை விற்பனை செய்ய அங்கீகாரம் அளித்ததாகவும் அந்த தேவாலயம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கடவுளின் அரண்மனைக்கு அருகிலேயே, ஒரு சதுர மீட்டர் நிலத்தின் ஆரம்ப விலை 100 டாலர் என்றும் அந்த தேவாலயம் விலையை நிர்ணயம் செய்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் பணத்தை செலுத்தி, சொர்க்கத்தில் தங்களது பெயரில் நிலத்தை பதிவு செய்யலாம் என்றும் விநோத விளம்பரத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டிலேயே இவ்வாறு விளம்பரம் செய்துள்ளது. இதை உண்மை என நம்பி சொர்க்கத்தில் தங்களுக்கும் இடம் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பணம் கட்டி போட்டிப் போட்டுக் கொண்டு நிலத்தை வாங்கி வருகிறார்களாம்.

அதேபோல், தற்போதும் மீண்டும் அவ்வாறு விளம்பரம் செய்துள்ளது அந்த தேவாலயம். இதனால், அந்த தேவாலயத்திற்கு பல கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பலரும் வேடிக்கையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இது “நூற்றாண்டின் நகைச்சுவை.” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.  மற்றொருவர் “இது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் மோசடியாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.

news18


 



Post a Comment

Previous Post Next Post