திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-145

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-145


குறள் 265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

நம்மளுடைய தவத்தால என்ன வேணுமோ அது நெனச்சமாதிரியே நமக்கு கெடைக்கும். அதுனால அந்த தவம் முயன்று செய்யப்படும். 

குறள் 266
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

அடக்கத்தோடயும், அன்போடயும் தவம் செய்றவொதான் கடமையை செய்யுதாவொ. மத்தவொள்லாம் ஆசைக்கு அடிமையாகி வெட்டித்தனமானதை செய்வாவொ. 

குறள் 268
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.

என்னோட உசிருதான் பெருசு, நாந்தான் பெரியவன்ங்கிற நெனைப்பு இல்லாதவொள, மத்த எல்லாருமே ரொம்ப பெருமையாப் பேசி கையெடுத்து கும்பிடுவாங்க. 

குறள் 269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.

நோம்புல்லாம் இருந்து, அதுனால கெடைய்க்கக் கூடிய வலிமை இருக்கே, அது உள்ளவொளால, சாவையும் எதுத்து நிய்க்க முடியும். 

குறள் 270
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

பத்து பைசாவுக்குக்கூட  பயன் இல்லாதவனுவொளா ரொம்ப பேரு இருக்கானுவொன்னா, அதுக்கு காரணம் தங்களைப் பத்தி தெரிஞ்சுக்கிட முயற்சிக்கவங்க கொஞ்ச பேராவும், முயற்சிக்காதவங்க ரொம்ப பேராவும் இருக்கதுனால தான். 

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post