ராஜகுமாரியின் சுயம்வரம்-37

ராஜகுமாரியின் சுயம்வரம்-37


வைத்தியர் சென்றதும் பானுவும் மீனாவும்  ராஜகுமாரியின் செயல் பாட்டைக் கவனித்த வாறே. மூலிகையைச் சுத்தம் செய்யத் தொடங்கினார்கள் .

அப்போது அறையில் அலாரம் ஒலித்தது. ஒலி கேட்ட ஒரு நிமிடத்துக்குள்ளே. அங்கே மகாராணியாரும் மந்திரியும் சில காவலர்களோடு வந்து நின்றார்கள். மகாராணியைக் கண்ட பானும் மீனாவும் "வணக்கம்" வைத்தார்கள்  .உள்ளே நுழைந்த மகாராணி  "எங்கே? வைத்தியர்" எனக் கேள்வி தொடுத்தார் .

"அவர் நீர் கொதிக்கும் இடம் வரை சென்றுள்ளார் மகாராணியாரே ."
என பணிவோடு கூறினாள் மீனா. "சரி" எனக் கூறிய மகாராணி .
அப்போதுதான் மகளின்  அறைப் பக்கம் பார்வையிட்டார் .

உடனே பதறிப் போய் பணிப் பெண்களை திட்ட ஆரம்ப்பித்து விட்டார். தன் மகளை "ஏன் தரையில் அமர்த்தியது". எனக் கடிந்து கொண்டார்.

 அப்போது மந்திரியார்  "ராஜகுமாரியை நன்றாகக் கவனித்தீர்களா? மகாராணியாரே" என்று மெல்லிய குரலில் கேட்டார். அவரது கேள்விக்குப் பின் தான் மகாராணி தன் மகள் ஏன் தரையில் இருக்கின்றாள் என்பதை உணர்ந்தார்  .

"அருகே யாரும் போவதில்லை அவள் அலறுவதால் இன்று போய் பாருங்கள்  ராணியம்மா" .என்று பானு கூறினாள்.

"நீ என்ன சொல்லுகிறாய் .என் பொண்ணு அழுவதை பார்க்கும். சக்தி என்னிடம் இல்லை" .என்றாள் மகாராணி. 

உடனே மீனா கூறினாள் .
"இல்லை அம்மா பானு சொல்வது சரியே. போய் அமருங்கள் அருகே .
இப்போது ராஜகுமாரி அழுவதில்லை" என்றாள் .

"என் மகளின் கண்ணீர் என்னை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் .வேண்டாம் நான் எட்ட நின்றே பார்க்கின்றேன்." என்றார் மகாராணியார்.

"இல்லை அரசியாரே நீங்கள் போங்கள்" என்று கட்டாயப் படுத்தினார்கள் .
பணி பெண்கள் இருவரும். 

"சரி" எனக் கூறிய  மகாராணி தயக்கத்தோடு அருகே சென்று நின்றார். அவர் அருகே போன பின்தான். ராஜகுமாரி என்ன செய்து கொண்டு இருக்கின்றார் என்பதை கவனித்தார் .

அதுவரை திரை மறைவினால் முற்றாக அறையின் உள்ளே தென்பட வில்லை. கண்டதுமே ஆனந்தத்தில் உரக்க அழைத்தார் .

"மந்திரியாரே இங்கே வந்து பாருங்கள். என் புத்திரி என்ன செய்து கொண்டு இருக்கின்றார்" என்று என மகிழ்ச்சி பொங்க அழைத்தார் .

மந்திரியாரும் அருகே ஓடினார் மந்திரி முகமும் மலர்ந்தது எப்படி இவை என்று அவரும் ஆச்சரியப்பட்டார் .வாய் விட்டு வைத்தியர் குமரனை பாராட்டி விட்டு ராணியம்மா பக்கம் பார்த்து நம்பிக்கை கொடுத்தார் .

"நம்ம பொண்ணு விரைவாக குணமடைந்து விடுவார் கவலை வேண்டாம்" என்றார். மகாராணியும் மகளை அணைத்து உச்சி முகர்ந்து விட்டு .
விடை பெற்றார் .

பானு மீனா இருவரையும்  பார்த்து மகளை பத்திரமாக கவனிக்கும்படி கட்டளை போட்டு விரைந்தார் .

(தொடரும் )



 



1 Comments

  1. நன்றிகள் அண்ணா கதையோடு ஒன்றிய புகைப் படம் மென்மேலும் அழகு கொடுக்கிறது 🙏

    ReplyDelete
Previous Post Next Post