திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -52

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -52


குறள் 1254
நிறையுடையேன் என்பேன்மன் 
யானோஎன் காமம் 
மறையிறந்து மன்று படும்.

ஏமஞ்சு!
வகுப்புதொடங்கிருச்சு!
உன்ன ஆசிரியை
கூப்பிடுறாங்கடி! 
மஞ்சு எழுந்து நின்றாள்! 
உன் முகமெல்லாம் வாடியிருக்கு! 
என்னகாரணம்? 
ஒன்றுமில்லை ஆசிரியை! 
லேசா தலைவலி! அவ்வளவுதான்! 
சரி சரி பாடத்தகவனி! 
பக்கத்து வகுப்பு ராணி 
இன்று பேச மறுத்துட்டா! 
மனசு எப்படியோ இருக்கு! 
நான் மனஉறுதி கொண்டவனு 
நெனச்சேன்! 
அவமேல உள்ள அன்பும் நட்பும் 
என்னையும் மீறி 
வகுப்புல காட்டிக் கொடுத்துறுதே!

குறள் 1255
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை 
காமநோய் உற்றார் அறிவதொன் றன்று.

என்தோழி 
பாமதிக்கு 
இன்னொருத்தி 
நட்பு கெடச்சதும் 
என்னப்பிரிஞ்சு 
போயிட்டா! அவபின்னால் 
போகக் கூடாதுங்கற 
மனவலிமை இந்த 
அன்புநோய் உள்ளவங்ககிட்ட 
இருப்பதில்லை போலும். 
இதுஎன்ன நோயோ!

குறள் 1256
செற்றவர் பின்சேறல் வேண்டி 
அளித்தரோ எற்றென்னை உற்ற துயர்.

நான் அழைக்க அழைக்க 
என் நட்புத்தோழி 
மங்கை 
கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டாள்! 
அவளுக்கு ஏழுவயது! 
எனக்கோ ஆறுவயது! 
இந்த அன்பும் பாசமும் 
கலந்த நட்பு நோயோ 
எதையும் பொருட்படுத்தாமல் 
அவள் பின்னால் நெஞ்சைப் 
போகச்சொல்லுதே! 
நியாயமா? 
என்னசெய்ய?

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post