48 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிர் பறிக்கும், ஜப்பானியர் 77 பேர்களைக் காவுகொண்ட புதுவகைத் தொற்று நோய்!

48 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிர் பறிக்கும், ஜப்பானியர் 77 பேர்களைக் காவுகொண்ட புதுவகைத் தொற்று நோய்!


2019ல் உலகலாவிய ரீதியாக பதட்டத்தை ஏற்படுத்திய  கொரோனா பெருந்தொற்று உலகை மருத்துவ ரீதியாக மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் நெருக்கடியில் தள்ளிவிட்டது.

அதன் தாக்கம் குறைந்து  உலக மக்கள் நிம்மதியடைந்து வரும்  நிலையில், ஜப்பானில் பரவி வரும் அரிய வகைத் தொற்று நோய் உலக நாடுகளை மீண்டும் பதற வைத்துள்ளது!

இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று  இலங்கை சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

ஜப்பான் நாட்டினுள் 'சதை உண்ணும் பாக்டீரியா' எனப் பொதுவாக அழைக்கப்படும் Streptococcal toxic shock syndrome (STSS) என்ற தொற்று நோய் பரவியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே, இலங்கை சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு இவ்வறிவித்தலை விடுத்துள்ளனர்.

STSS ஒரு சிகிச்சையளிக்கக்கூடிய பாக்டீரியா தொற்று என்பதும், ஆரம்ப அறிகுறிகளாக குளிர் காய்ச்சல்,  தசை வலி, குமட்டல் மற்றும் வாந்தி என்பன ஏற்படுவதோடு, 24 முதல் 48 மணி நேரத்திற்குள் குறைந்த இரத்த அழுத்தம், உறுப்புக்கள் செயலிழப்பு மற்றும் விரைவான இதயத்துடிப்பு போன்ற சிக்கல்களுக்கும் வழிவகுக்கலாம்.

நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) கருத்துப்படி , STSS க்கு உடனடி மருத்துவ கவனிப்பும், நோய்த் தொற்றை நிர்வகிக்க மற்றும் நோயாளியின் நிலையை உறுதிப்படுத்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடனான சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களுள், இறப்பு விகிதம் அண்ணளவாக 30 சதவிகிதமாகும்.

உலகளாவிய சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதால், இலங்கையின் சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் இருப்பார்கள் என்றும், வெளிவரும் எந்தவொரு சுகாதார அச்சுறுத்தல்களுக்கும் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் டாக்டர் கினிகே உறுதிப்படுத்தியுள்ளார்.

பாக்டீரியாவின் சில விகாரங்களால் ஏற்படும் இந்நோய் உடனடியாக சிகிச்சையளிக்கப் பட்டால் உயிராபத்திலிருந்து விரைவாக முன்னேறலாம்.

அதனால் STSS உடன் தொடர்புடைய அறிகுறிகளை தென்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டு மென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.  
2023 ஆண்டு முழுவதிலும் இந்நோயால் 941 பேர்கள் ஜப்பானில் பாதிக்கப்பட்ட நிலையில்,2024 ஜனவரி முதல் ஜூன் வரை மட்டும் இந்நோயால் ஜப்பானில்  977 பேர் பாதிக்கப்பட்டு, 77 பேர் இறந்துள்ளதாக  அந்நாட்டின் தேசிய தொற்று நோய் மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு முதல் STSS நோய் குறித்து ஜப்பானிய தேசிய தொற்று நோய் மையம் ஆய்வு செய்து வருகின்றது.

குரூப் A- STSS  நோய் குழந்தைகளுக்கு தொண்டையில் வீக்கமும் புண்ணும் ஏற்படுத்துவதாகவும்,  இந்த அறிகுறியை ‘Strep Throat’ என்று குறிப்பிடுவதாகவும் இதைத் தவிர, குளிர் காய்ச்சல், தசை வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகிய அறிகுறிகளாகத் தென்படுவதாகவும் அறியப்படுகின்றது.

இவ்வாறான அறிகுறிகள் தென்படுமிடத்து உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுவதே மேலானது என்று கூறப்படுகின்றது.

செம்மைத்துளியான்


 



Post a Comment

Previous Post Next Post