பள்ளிப்படிப்பை முடிக்காத இளம் பில்லியனர்.. Zerodha நிகில் காமத்-ன் வியக்க வைக்கும் கதை..!

பள்ளிப்படிப்பை முடிக்காத இளம் பில்லியனர்.. Zerodha நிகில் காமத்-ன் வியக்க வைக்கும் கதை..!


இந்தியாவின் இளம் வயது செல்வந்தர் பட்டியலில் மிகவும் முக்கியமானவர் நிகில் காமத், இவருக்கு வயது 36. கர்நாடகாவில் 1986 செப்டம்பர் 5 ஆம் தேதி பிறந்தார். பத்தாம் வகுப்பு முடித்தபின் படிப்பை நிறுத்திவிட்டார். பட்டப்படிப்பு எதுவும் அவர் படிக்கவில்லை. ஒரு கால்சென்டரில் தனது முதல் வேலையைத் தொடங்கினார்.

அதேவேளையில் பங்கு வர்த்தகத்திலும் ஆர்வம் காட்டினார். 2006 ஆம் ஆண்டில் காமத் ஒரு சப் புரோக்கர் ஆனார். சகோதரர் நிதின் காமத்துடன் சேர்ந்து காமத் ஆண்டு அசோசியேட்ஸ் எனும் கன்சல்டன்ட் நிறுவனத்தை ஆரம்பித்தனர். பெரும் பணக்காரர்கள் அவர்களது வாடிக்கையாளர்களாக வந்தனர்.

அவர்கள் தொடங்கிய ஜரோதா நிறுவனம் பங்குகள், கரன்ஸி, கம்மாடிட்டிகள் வர்த்தகத்தில் இறங்கியது. ஜரோதா நிறுவனம் மூலம் காமத் ஒரு டிஸ்கவுன்ட் புரோக்கரேஜை நடத்தினார். இதன் மூலம் தனது கமிஷனை காமத் குறைத்துக் கொண்டதால் ஏராளமான முதலீடுகள் குவியத் தொடங்கின. 2020 ஆம் ஆண்டில் ட்ரூபீகான் என்ற சொத்து நிர்வாக கம்பெனியை காமத் தொடங்கினார். இந்திய மார்க்கெட்டில் அல்ட்ரா பணக்கார நபர்கள் முதலீடு செய்தனர். 2021 ஆம் ஆண்டில் கிருஹாஸ் என்ற ரியல் எஸ்டேட் முதலீட்டு நிறுவனத்தை அபிஜித் பாய் என்பவருடன் இணைந்து ஆரம்பித்தார். கிருஹாஸ் புதிய ஸ்டார்ட் அப்கள் போன்ற புரோடெக் நிதியில் கவனம் செலுத்தியது. நிகிலின் நிகர சொத்து மதிப்பு 1.1 பில்லியன் டாலர்கள். அவரது சகோதரர் நிதின் காமத்தும் 2.7 பில்லியன் டாலர் சொத்துகளை வைத்துள்ளார். போர்ப்ஸ் பில்லியனர்கள் 2023 பட்டியலில் நிகில் காமத் இடம் பெற்றுள்ளார்.

ஜூன் 2023இல் காமத் தனது சொத்தில் பாதியை காலநிலை மாற்றம், கல்வி, ஹெல்த் கேர் செலவுகளுக்காக தானம் செய்தார். ஜூன் 2021இல் காமத் ஒரு ஆன்லைன் செஸ் மேட்ச்சை ஐந்துமுறை சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த்துடன் மோதினார். இந்தப் போட்டியின் மூலம் கொரோனா பாதிப்பால் ஆனவர்களுக்கு நிதி திரட்டினார்.

 பில் கேட்ஸ், மெலிண்டா பிரஞ்ச் கேட்ஸ், வாரன் பபேட் தொடங்கிய உறுதிமொழிக்கு நிகில் காமத்தும் ஒப்புதல் அளித்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் தனது சொத்துகளை தானம் செய்வதாக நிகில் அறிவித்தார். 240 அல்ட்ரா பணக்காரர்கள் கிளப்பில் இணைந்த நிகில் சமூகத்துக்காக சேவை செய்ய முன்வந்தார். 

திருமணமான அவருக்கு குழந்தைகள் இல்லை. 2020 ஆம் ஆண்டில் ஜிரோதாவை நிகில் சகோதரர்கள் தொடங்கினர். பங்கு புரோக்கர் கம்பெனியான இது இந்தியாவில் பங்கு வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்துக்கு 10 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதுவரை 20000 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது.


goodreturns




 



Post a Comment

Previous Post Next Post