வடமேல் மாகாண ஆளுநருடன் ஒரு சந்திப்பு!- Ai News Video

வடமேல் மாகாண ஆளுநருடன் ஒரு சந்திப்பு!- Ai News Video


ஸ்ரீலங்கா ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவறும் கட்சியின் பிரதித் தலைவரும் சர்வதேச RinTv ஊடக வலை அமைப்பின் ஸ்தாபகரும், வடமேல் மாகாண ஆளுநரை சந்தித்த தருணம்

1.ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் அஷ்ஷேக் மௌலவி சதிக் முகமது மற்றும்  சர்வதேச RinTv ஊடக வலை அமைப்பின் ஸ்தாபகரும் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் பிரதித் தலைவருமான Deshbandhu Deshamani Vishwa keertiLanka putra GGI Jabeen Mohamed அவர்களும்,

வடமேல் மாகாண ஆளுநரை சந்தித்து வடமேல் மாகாணத்தில் குறிப்பாக குருநாகல் மாவட்டத்தில்  ஆசிரியர்  பற்றாக்குறை மற்றும் புதிய ஆசிரியர் நியமனம் தொடர்பாக வடமேல் மாகாண ஆளுநர் கௌரவ அல் ஆலிம் ஹாபீஸ் அஹமத் நசீர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துரைத்தபோது
தெரிவிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு.

பல ஆண்டு காலமாக புதிய ஆசிரியர் நியமனத்தின் போது முறைகேடான விடயங்கள் நடந்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டதுடண்.வழங்கப்பட்ட நியமனத்தில் ஆசிரியர்கள் பணியேற்காமல் மேன் முறையீடு செய்த விடயங்களும்,கல்வி மாற்றத்தை உருவாக்குவதற்கான புதிய நியமன கட்டளைகளையும் வழங்குவதோடு இம்முறை புதிய நியமனத்தில் நியமிக்கப்படாதவர்களை அவசரமாக மற்றும் ஓர்  கெசட் கட்டளை வெளியாக்கி மீண்டும் ஒரு நேர்முகப் பரிட்சையை ஏற்பாடு செய்ய வேண்டிய விடயங்களும் பேசப்பட்டதுடன் இம்முறை  வழங்கப்படுகின்ற புதிய நியமனத்தின் போது மிகவும் நேர்த்தியாகவும் தெளிவாகவும் ஆளுநர் அவர்கள் நடந்து கொண்ட  விடயத்தை அவதானித்த மிகவும்  GGI Jabeen Mohamed ஆளுநர் முன்னிலையில் கௌரவமான முறையில் நன்றியை எடுத்துரைத்தார்.

மேலும் வளையக்கல்வி காரியாலயத்தின் ஊடாக ஆரம்பப் பிரிவு ஆசிரியைகளின்சுழற்சி முறையிலான இடமாற்றத்தினால் 
எலபடகாம அல் அமீன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையின் ஆரம்ப பிரிவு ஆசிரியை  புதிய நியமனத்தின் அடிப்படை  இடம் மாறி சென்றதை அடுத்து அந்த ஆசிரியைக்கு பாகரமாக வேறு பாடசாலையில் இருந்து அல் அமீன் பாடசாலைக்கு வர வேண்டிய ஆசிரியை இடமாற்றத்தை ஏற்காமல் மேன் முறையீடு செய்த காரணத்தினால் 45 மாணவர்களின் ஆரம்பக் கல்வி ஒரு மாத காலமாக பாதிப்படைந்துள்ள விடயத்தையும் அவர் ஆளுநர் முன்னிலையில் எடுத்துரைத்தார்.
இந்த விடயத்தை ஆளுநரிடம் எடுத்துரைத்த போது ஆளுநர் அவர்களால் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அந்த ஆசிரியை குறித்த நியமனத்தின் பிரகாரம் அல்ல அமீன் பாடசாலையில் பணி புரிய  வேண்டும்.மேலும் உடனடியாக கையொப்பமிட்டு ஆளுநருக்கு தெரியப்படுத்துமாறு வலயக் கல்விக் காரியாலயத்திற்கு கட்டளையிட்டார்.

அதே நேரம் ஆசிரியர்கள் இடமாற்றம் வந்ததும் மாற்று பாடசாலைகளின் இடமாற்றத்தை பொறுப்பு ஏற்காமல் மேன் முறையீடு செய்யும் ஆசிரியைகளின் சம்பளத்தை இடை நிறுத்துமாறு கட்டளையிட தீர்மானம் எடுப்பதாகவும் அவ்விடத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

எலபடகாம அல் அமீன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் கடந்த 30 ஆண்டுகளாக 22 ஆசிரியர்களுக்கு மேற்பட்டவர்கள் குறை பாடாகவே காணப்படுகின்றனர் என்ற விடயத்தை ஆளுநரிடம் இந்த மாதம் 06 மற்றும் 19 திகதிகளில் சந்தித்தபோது தெரிவித்த விடயத்தை விசாரணை மூலம் ஆளுநர் அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் அல் அமீன் பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினையை குறுகிய காலத்தில் தீர்த்து தருவதாகவும் இம்முறை புதிய நியமனத்தின் போது அல் அமீன் மத்திய மகா வித்தியாலய பாடசாலைக்கு அதிகளவான ஆசிரியர்களை நியமித்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

மேலும் அல் அமீன் மத்திய மகா வித்தியாலய பிரதி அதிபர் நியமனம் மற்றும் கணித பாட ஆசிரியர் தொழில்நுட்ப ஆசிரியர் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் போன்ற அதிக முக்கியமான வெற்றிடங்களை அவசரமாக நிரப்பித் தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இவ்வாறு ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய சூழ்நிலையிலும் பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஒன்றிணைந்து மாணவர்களின் கல்விக்காக பாடு பட்டமைக்கு ஆளுநர் பாராட்டும் தெரிவித்தார்.

பாடசாலையின் கல்விசார் பற்றாக்குறை மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதோடு  அல் அமீன் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பாடசாலையை மேற்பார்வை செய்து மாணவர்களின் திறமைகளை காண்பதற்காக கௌரவ ஆளுநர் அவர்களை பாடசாலைக்கு சமூகம் தருமாறு மிகவும் பணிவுடன் GGI Jabeen Mohamed அவர்கள் ஆளுநர் மற்றும் கல்வி சார் அதிகாரிகளின் முன்னிலையில் அழைப்பை   முன்வைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





 



Post a Comment

Previous Post Next Post