ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டாலும் போர் தொடரும் - நெதன்யாகு

ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டாலும் போர் தொடரும் - நெதன்யாகு


எட்டு மாத போரை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுக்கும் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் தான் உடன்படப் போவதில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தனியாகு, காசாவில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளை திருப்பி அனுப்புவதை எளிதாக்கும் ஒரு "பகுதியளவு" ஒப்பந்தத்திற்கு அவர் தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், இஸ்ரேலிய  தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு பாதையாக இருக்கும் என்று அமெரிக்கா முன்னர் கூறியிருந்த போதிலும், காசா மீதான இஸ்ரேலின் போரை முடிவுக்குக் கொண்டுவர நிர்ணயிக்கும் எந்த உடன்பாட்டிற்கும் தான் உடன்படப் போவதில்லை என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

"கடத்தப்பட்டவர்களை திருப்பி அனுப்புவதும், காசாவில் ஹமாஸ் ஆட்சியை வேரறுப்பதுமே இலக்கு" என்று அவர் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய ஊடகமான சேனல் 14 க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


 



Post a Comment

Previous Post Next Post