ரஷியா- வடகொரியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது

ரஷியா- வடகொரியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது


ரஷியா- வடகொரியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. வடகொரியா சென்றுள்ள ரஷிய அதிபர் விளாடிமீர் புதின் அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது 

இரண்டு நாடுகளில் எந்த நாடு தாக்கப்பட்டாலும் இன்னொரு நாடு உதவுவதற்கு உறுதியளிக்கும் அம்சம் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது. 

இந்த ஒப்பந்தம் தற்காப்புக்கானது மட்டுமே. தனது எல்லைகளை பாதுகாத்துக்கொள்ளும் வட கொரியாவின் உரிமை நிலைநாட்டப்படுவதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது என்று பியோங்யாங்கில் செய்தியாளர் சந்திப்பில் ரஷிய அதிபர் விளாடிமீர் புதின் கூறினார். 

மேலும், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள வடகொரியா, போரில் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு ஆயுதங்களையும் விநியோகித்து வருவதாக கூறப்படுகிறது.

nambikkai


 



Post a Comment

Previous Post Next Post