"ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்கமாட்டோம்" - உக்ரேனிய அதிபரிடம் கூறிய சீன அதிபர்

"ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்கமாட்டோம்" - உக்ரேனிய அதிபரிடம் கூறிய சீன அதிபர்


சீனா, ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்காது என்று
சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) உக்ரேனிய அதிபர்
வொலோடிமிர் ஸெலென்ஸ்கியிடம் (Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.

தொலைபேசி உரையாடலில் சீன அதிபர் அந்த உறுதியை வழங்கியதாகத் திரு. ஸெலென்ஸ்கி G7 உச்சநிலை மாநாட்டில் கூறினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் அவர் கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

தொலைபேசி உரையாடல் எப்போது நடந்தது என்பதை அவர் குறிப்பிடவில்லை.

ஆனால் அதிபர் பைடன் ரஷ்யாவிற்குச் சீனா உதவி வருவதாகக் கூறினார்.

ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை ரஷ்யாவிற்குச் சீனா வழங்குவதாய் அமெரிக்கா நம்புகிறது.

சில நாள்கள் முன்பாகச் சில சீன நிறுவனங்கள்மீது அமெரிக்கா தடைகளை விதித்தது.

அதற்குச் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா நடத்தும் போரில் தனக்குச் சம்பந்தமில்லை என்று பெய்ச்சிங் கூறியுள்ளது.

seithi



 



Post a Comment

Previous Post Next Post