உக்ரைனுக்கு அனுப்பப்படும் ராணுவ உதவிகள் போதுமானதாக இல்லை : ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

உக்ரைனுக்கு அனுப்பப்படும் ராணுவ உதவிகள் போதுமானதாக இல்லை : ஜெலன்ஸ்கி எச்சரிக்கை


80 நாடுகள் உக்ரைனின் 'பிராந்திய ஒருமைப்பாட்டை' ஆதரித்துள்ள நிலையில், ரஷ்யாவை தோற்கடிக்க மேற்கத்திய நாடுகள் அனுப்பும் இராணுவ உதவிகளின் அளவு இன்னும் போதுமானதாக இல்லை என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று எச்சரித்தார்.

சுவிட்சர்லாந்தில் "அமைதிக்கான பாதை" என்ற இரண்டு நாள் மாநாட்டின் முடிவில் பேசிய உக்ரைன் ஜனாதிபதி, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் தென்னாப்பிரிக்கா உட்பட பல முக்கிய நாடுகள் அறிக்கையில் கையெழுத்திடத் தவறிய போதிலும், இந்த நிகழ்வை ஒரு "வெற்றி" என்று பாராட்டினார்.

அதிபர் விளாடிமிர் புதின் 'நியாயமான சமாதானத்திற்கு' தயாராக இல்லை என்று பிரதிநிதிகளிடம் கூறிய ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுடன் 'நாளை' பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது என்றும் ஆனால் அதன் படைகள் 'எங்கள் சட்டபூர்வமான பகுதிகளை விட்டு வெளியேறினால்' மட்டுமே என்றும் கூறினார்.

மேற்கத்திய நாடுகளின் பில்லியன் கணக்கான டாலர்கள் இராணுவ உதவி இருந்தபோதிலும், போரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவின் முன்னேற்றங்களை முறியடிக்க உக்ரைன் மீண்டும் போராடி வரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள போர்கன்ஸ்டாக் ரிசார்ட்டில் இரண்டு நாள் மாநாடு நடந்தது.

உச்சிமாநாட்டிற்கு ரஷ்யா அழைக்கப்படாததும், அதன் முக்கிய நட்பு நாடான சீனாவால் உச்சிமாநாட்டை புறக்கணிக்கப்பட்டதுடன்  தொடர்ந்து 80 நாடுகள் கூட்டாக உக்ரைனின் "பிராந்திய ஒருமைப்பாடு" எந்த சமாதான உடன்பாட்டிற்கும் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தன.

அணுசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, கைதிகள் பரிமாற்றம் ஆகியவையும் முக்கியமானவை என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

ஆனால் தனது நாட்டிற்கு அனுப்பப்படும் மேற்கத்திய இராணுவ உதவிகளின் தற்போதைய அளவு கியேவ் போரில் வெற்றி பெறுவதை உறுதி செய்ய போதுமானதாக இல்லை என்று அவர் எச்சரித்தார்.

"ரஷ்யாவும் அதன் தலைமையும் ஒரு நியாயமான அமைதிக்கு தயாராக இல்லை" என்று ஜனாதிபதி ஜெலன்ஸ்கி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

"எதற்காகவும் காத்திருக்காமல் நாளைக்கூட ரஷ்யா எங்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும்---அவர்கள் எங்கள் சட்டபூர்வ எல்லைகளை விட்டு வெளியேறினால்" என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் கூறுகையில், ரஷ்யாவுடன் சமாதான பேச்சுவார்த்தைகள் சாத்தியமற்றவையாக உள்ளன, ஏனெனில் "போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் புட்டின் தீவிரமாக இல்லை" என்றார்.

"உக்ரைனை நிராயுதபாணியாக்குவதை அவர் வலியுறுத்துகிறார், அது வருங்கால ஆக்கிரமிப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய மூர்க்கத்தனமான நிபந்தனைகளை எந்த நாடும் ஒருபோதும் ஏற்காது."என்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் தெரிவித்தார்.


 



Post a Comment

Previous Post Next Post