ஆசியாவிலேயே தற்போது இந்திய அணிக்கு அடுத்து ஆப்கானிஸ்தான் தானாம் – பாக் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு

ஆசியாவிலேயே தற்போது இந்திய அணிக்கு அடுத்து ஆப்கானிஸ்தான் தானாம் – பாக் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு


ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது நடைபெற்று வரும் 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. ஏனெனில் கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணியாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தான் அணி கடந்த பல வருடங்களாகவே மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்தாலும் பெரிய தொடர்களில் சோபித்தது கிடையாது. 

ஆனால் சிறிய அணியாக இருந்தும் கடந்த சில ஆண்டுகளாக தங்களது அணியில் தரமான வீரர்களை தேர்வு செய்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆப்கானிஸ்தான அணி அவ்வப்போது மிகப்பெரிய தொடர்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த வேளையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் நிச்சயம் பெரிய சம்பவத்தை நிகழ்த்தப் போகிறது என்று சிலர் கூறி வந்தனர். 

அந்த வகையில் 20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் இந்த டி20 தொடரில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை சூப்பர் 8 சுற்றில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணியும் வீழ்த்தி முதல் முறையாக ஐசிசி தொடர்களில் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதோடு ஆசியாவிலேயே இரண்டாவது மிகச் சிறந்த அணியாகவும் தற்போது ஆப்கானிஸ்தான் அணி மாறியுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாகவே ஆசிய கண்டத்தில் மிகச்சிறந்த கிரிக்கெட் அணியாக இந்தியா இருந்து வருகிறது இரண்டாவது இடத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் அவ்வப்போது மாறி மாறி இடம் பெற்று வந்தன. 

ஆனால் இலங்கை கிரிக்கெட்டில் சங்ககாரா, ஜெயவர்த்தனை, ஜெயசூர்யா போன்ற வீரர்கள் வெளியேறியதற்கு பின்னர் அந்த அணி சரிவை சந்தித்தது. அதேபோன்று பாகிஸ்தான் அணியும் சீனியர் வீரர்கள் ஓய்வுக்கு பிறகு சரிவை சந்தித்தாலும் இடையிடையே இந்திய அணியும் மிஞ்சும் அளவிற்கு பலமான போட்டியை அளித்தது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அணியே ஆசியாவின் நம்பர் ஒன் அணியாக இருந்து வந்தது. 

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஆகியவற்றை கடந்து ஆப்கானிஸ்தான் அணி கடந்த சில ஆண்டுகளாகவே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதோடு பெரிய பெரிய அணிகளுக்கும் அதிர்ச்சி தோல்வியை வழங்கி தற்போது வெற்றி சதவீதத்தில் அதிகரித்து ஆசியாவின் இரண்டாவது சிறந்த அணியாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

crictamil


 



Post a Comment

Previous Post Next Post