காஸாவில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

காஸாவில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.


காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்களை குறிவைத்து வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடத்தப்பட்டுள்ள கொடூரமான ஏவுகணைத் தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்த கோர தாக்குதல்களில் 45 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐசிஆர்சி) தெரிவித்துள்ளது.

ரஃபா நகரத்திலிருந்து இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்கள், காஸாவில்  தஞ்சமடைந்திருந்த தற்காலிக முகாம்கள் மீதும் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும், அதிலும் குறிப்பாக, காஸாவில் அல் மாவாஸி பகுதியில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்களை சுற்றியுள்ள பகுதிகளில் தார்ப்பாய்களால் அமைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களின் தற்காலிக உறைவிடங்கள் மீது குறிவைத்து  காட்டுமிராண்டித்தனமாக குண்டுவீசி தகர்க்கப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 50 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் பாலஸ்தீன சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களுக்கு ஐ நா பாதுகாப்பு மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

nambikkai


 



Post a Comment

Previous Post Next Post