நீர் சிகிச்சைத் தொட்டியில் கணவன் மரணம், மனைவி உயிருக்கு போராட்டம்

நீர் சிகிச்சைத் தொட்டியில் கணவன் மரணம், மனைவி உயிருக்கு போராட்டம்


மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நகரத்தில் உள்ள ‘ஜக்குஸி’ எனப்படும் நீர் சிகிச்சைத் தொட்டி ஒன்றில் 43 வயது அமெரிக்க ஆடவர் ஒருவர் மின்சாரக் கசிவு காரணமாக உயிரிழந்தார்.

அதே சமயம் அவரது மனைவி கடுமையாகக் காயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார்.

அந்த மாது சிகிச்சைக்காக மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்று கார்டியன் செய்தித்தாள் வெள்ளிக்கிழமை (ஜூன் 14ஆம் தேதி) அன்று தெரிவித்தது.

அந்தத் தம்பதியரை அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தின் எல் பாசோ நகரைச் சேர்ந்த திரு ஜோர்கே குய்லன், திருவாட்டி லிசட் ஸாம்பிரானோ என ஊடகத் தகவல்கள் அடையாளப்படுத்தின.

இந்தச் சம்பவம் புவெர்டோ பெனாஸ்கோ என்ற இடத்தில் உள்ள சேனோரான் கடற்கரை ஓய்வுத்தளத்தில் நிகழ்ந்தது.

இந்தச் சம்பவம் குறித்த காணொளியில் அந்த நீர் சிகிச்சைத் தொட்டியைச் சுற்றியிருந்த மக்கள் உரத்தக் குரலில் கத்துவது தெரிகிறது. அதில் ஒருவர் தரையில் படுத்த நிலையில் உள்ள ஒருவருக்கு இதய செயல்முறை சிகிச்சை அளிப்பதும் தெரிகிறது.

அந்தத் தம்பதியரை அந்த நீர் சிகிச்சைத் தொட்டியில் கண்ட ஒருவர் அவர்கள் செயலிழந்த நிலையில் இருந்ததாகத் தெரிவித்தார்.

அந்த நீர் சிகிச்சைத் தொட்டியில் இறங்க முற்பட்டபோது தன்னை மின்சாரக் கசிவு தாக்கியதால் தான் உதவி கேட்டு கத்தியதாக அவர் கூறினார்.

tamilmurasu


 



Post a Comment

Previous Post Next Post