காயமடைந்த பாலஸ்தீனரை ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்ற இஸ்ரேல் ராணுவம்: உலகெங்கிலுமிருந்து கண்டனங்கள் வலுக்கின்றன

காயமடைந்த பாலஸ்தீனரை ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்ற இஸ்ரேல் ராணுவம்: உலகெங்கிலுமிருந்து கண்டனங்கள் வலுக்கின்றன


மேற்கு கரையில் தேடுதல் வேட்டையின்போது காயமடைந்த பாலஸ்தீனரை இஸ்ரேலிய ராணுவம் ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மனித உரிமை மீறல் என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

மேற்கு கரை ஜெனின் நகரத்தில் கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேலிய ராணுவம் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பலரை இஸ்ரேல் இராணுவம் கொன்றது. 

அதில் பாலஸ்தீனர் ஒருவர் படுகாயமடைந்தார். அவரை இஸ்ரேலிய ராணுவம் ஜீப்பின் முன்பக்கம் கட்டி இழுத்து சென்றது. இதுதொடர்பான வீடியோ வைரலானதையடுத்து இஸ்ரேல் ராணுவத்தின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்தன.

போர் நடவடிக்கையின்போது நிலையான விதிமுறைகளை கடைபிடிக்க தவறிவிட்டது. காயமடைந்த பாலஸ்தீனரை ஜீப்பில் கட்டிவைத்து இழுத்துச் சென்ற சம்பவம் இஸ்ரேலிய ராணுவத்தின் மனிதாபிமானமற்ற விதிமீறலை எடுத்துக்காட்டுகிறது என பல முன்னணி சர்வதேச ஊடகங்கள் குற்றம் சாட்டின.

இதுகுறித்து காயமடைந்த பாலஸ்தீன நபரின் குடும்பத்தினர் கூறுகையில் இஸ்ரேலிய ராணுவத்தின் கைது நடவடிக்கையின் போது அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த நிலையில் அவரை ஜீப்பின் முன்புறத்தில் கட்டிக்கொண்டு அவரை வலுக்கட்டாயமாக இஸ்ரேல் ராணுவம் இழுத்துச் சென்றது என்று தெரிவித்தனர்.

மேற்கு கரை நகரமான ஜெனின் வரலாற்று ரீதியாக போராளிகளின் கோட்டையாக திகழ்கிறது. இதனால், இஸ்ரேல் ராணுவம் இங்கு அவ்வப்போது காட்டுமிராண்டித் தாக்குதலை அவ்வப்போது நடத்தி வருகிறது. 

nambikkai


 



Post a Comment

Previous Post Next Post