ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஜிம்பாப்வே தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆனால் அந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே இந்தியாவை 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியது. அதனால் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள அந்த அணி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்த தொடரில் வழக்கம் போல அனைத்து சீனியர் வீரர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனால் சுப்மன் கில் தலைமையில் 2024 ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஜிம்பாப்வேயை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் முதல் போட்டியிலேயே அனுபவமில்லாமல் ஜிம்பாப்பே அணியை குறைத்து மதிப்பிட்ட இளம் வீரர்கள் இந்தியாவுக்கு தோல்வியை பெற்றுக் கொடுத்தனர்.
ஜூலை ஆறாம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்பே டியோன் மேயர்ஸ் 23, க்ளைவ் மடண்டே 29* ரன்கள் எடுத்த உதவியுடன் 116 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதைத் துரத்திய இந்தியாவுக்கு அபிஷேக் ஷர்மா 0, ருதுராஜ் 7, ரியான் பராக் 2, ரிங்கு சிங் 0, ஜுரேல் 6 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் அதிகபட்சமாக கேப்டன் கில் 31, வாஷிங்டன் சுந்தர் 22 எடுத்தும் 19.5 ஓவரில் 102 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா அவமானத் தோல்வியை பதிவு செய்தது. ஏனெனில் 20 அணிகள் விளையாடிய 2024 டி20 உலகக் கோப்பைக்கு ஜிம்பாப்வே அணி தகுதி பெறவில்லை. ஆனால் தகுதி பெறாத ஜிம்பாப்வே அணியிடம் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.
அதை விட சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை இந்தியா 22 போட்டிகளில் 120க்கும் குறைவான ரன்களை சேசிங் செய்துள்ளது. அதில் இதற்கு முன் 21 போட்டிகளில் வெற்றி கண்ட இந்தியா முதல் முறையாக இப்போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக 120க்கும் குறைவான இலக்கை சேசிங் செய்ய முடியாமல் இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது.
இது போக இதற்கு முன் கடைசியாக விளையாடிய 12 டி20 போட்டிகளில் இந்தியா தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வந்தது. அந்த வெற்றி நடை இந்தப் போட்டியில் முடிவு பெற்றது. அது போக 2024ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஃபைனல் வரை இந்தியா ஒரு டி20 போட்டியில் கூட தோல்வியை சந்தித்ததில்லை. ஆனால் முதல் முறையாக இந்த வருடம் ஜிம்பாப்வே அணியிடம் இந்தியா தோற்றுள்ளது.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments