Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-147


குறள் 277
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.

வெளிய இருந்து பாக்கதுக்கு குன்றிமணி மாதிரி செவப்பு ரெட்டு போல அழகா இருந்தாலும், அதே குன்றி மணியின் முனை மாதிரி கருத்த மனசு உள்ளவொ இந்த ஒலகத்துல ரொம்பவே உண்டு. 

குறள் 278
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

தண்ணில நல்ல  முங்கி ஒடம்பை மறைச்சுக்கிடுத மாதிரி, மனசு பூராவும் அழுக்கை வச்சுக்கிட்டு, நல்லவன் மாதிரி நடிக்க அயோக்கியப் பயலுவொ  ரொம்ப பேரு இந்த ஒலகத்துல நம்மைச் சுத்தி வாரானுவொ.

குறள் 281
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

எதையும் களவாங்கணும்ங்கிற நெனைப்பு தன்னோட மனசுக்குள்ள வராம ஒருத்தன்  பாத்துக்கிட்டாம்னா, மத்தவொளோட கேவலமான பேச்சுல இருந்து தப்பிச்சுக்கலாம். 

குறள் 282
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

அடுத்தவனோட பொருளை வஞ்சகத்தால் களவாங்கலாம்னு, மனசுல நெனைய்க்கதே பெரிய தப்பு. 

குறள் 283
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

களவாண்டு சேக்குற சொத்து, துவக்கத்துல பாக்கதுக்கு பெரிசா தெரியும். போவப் போவ அது ஏற்கனவே இருக்க சொத்தையும் சேத்து காலி பண்ணிறும். 

(தொடரும்)




 



Post a Comment

0 Comments