21 வருடங்கள்.. 704 விக்கெட்ஸ்.. விடைபெற்ற ஆண்டர்சன்.. வெ.இ அணியை சுருட்டிய இங்கிலாந்து வீரர் 134 வருட சாதனை

21 வருடங்கள்.. 704 விக்கெட்ஸ்.. விடைபெற்ற ஆண்டர்சன்.. வெ.இ அணியை சுருட்டிய இங்கிலாந்து வீரர் 134 வருட சாதனை


வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இங்கிலாந்து அணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி ஜூலை 10ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய  வெஸ்ட் இண்டீஸ் மிகவும் சுமாராக விளையாடி 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக லூயிஸ் 27 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் கஸ் அட்கின்ஷன் 7 விக்கெட்ட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 371 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 76, ஓலி போப் 57, ஜோ ரூட் 68, ஹரி ப்ரூக் 50, ஜெமி ஸ்மித் 70 ரன்கள் எடுத்த நிலையில்  வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜெய்டென் சீல்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 150 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 136 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.

அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 31* ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் கஸ் அட்கின்சன் 5, ஜேம்ஸ் ஆண்டர்சன் 3, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதனால் இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இப்போட்டியில் அறிமுக வீரர் அட்கின்ஷன் 106 ரன்கள் கொடுத்து 12 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதன் வாயிலாக இங்கிலாந்துக்காக 134 வருடங்கள் கழித்து அறிமுகப் போட்டியிலேயே 12 விக்கெட்டுகள் எடுத்து 3வது சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் 1890ஆம் ஆண்டு ஓவலில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்காக அறிமுகமான பிரட் மார்ட்டின் 102 ரன்கள் கொடுத்து 12 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

அதை விட இந்த வெற்றியுடன் இங்கிலாந்து ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பிரியமானதுடன் ஓய்வு பெற்றார். கடந்த 2002இல் அறிமுகமாகி 21 வருடங்களாக உலகின் அனைத்து டாப் பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்த அவர் 704 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வேகப்பந்து வீச்சாளர் என்ற யாராலும் நெருங்க முடியாத உலக சாதனையுடன் அவர் விடை பெறுகிறார். ஏனெனில் அவரைத் தவிர்த்து மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் 650 விக்கெட்டுகள் கூட எடுத்ததில்லை. அவரை இங்கிலாந்து அணியும் ரசிகர்களும் மனம் உருக வாழ்த்தி வெற்றியுடன் வழி அனுப்பி வைத்தனர்.

crictamil



 



Post a Comment

Previous Post Next Post