காணாமற்போன மலையேறியின் உடல் 22 ஆண்டுக்குப் பின் கண்ணில் தட்டுப்பட்டது

காணாமற்போன மலையேறியின் உடல் 22 ஆண்டுக்குப் பின் கண்ணில் தட்டுப்பட்டது


பெருவின் பனிமலையில் ஓர் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது ஹுவாஸ்கரன் (Huascaran) மலையில்  22 ஆண்டுகளுக்கு முன் காணாமற்போன மலையேறிக்குச் சொந்தமானது.

2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவில்லியன் ஸ்தாம்ஃப்ல் (William Stampfl) சிலருடன் சேர்ந்து மலையேறினார். 

திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவில் அவர் சிக்கிக்கொண்டார்.  எவ்வளவு தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்போது மலையில் பனி உருகியிருப்பதால் ஸ்தாம்ஃப்லின் உடல் கண்ணுக்குத் தட்டுப்பட்டிருக்கிறது. 

அவருடைய உடல் உறைபனியில் நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது.

ஸ்தாம்ஃப்லின் ஆடைகள்...மலையேற்றக் கருவிகள்...காலணிகள் அனைத்தும் நல்ல நிலையில் இருந்தன.

கடுங்குளிரால் அது சாத்தியமானதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஸ்தாம்ஃப்லின் உடைமைகளில் கடப்பிதழும் இருந்ததால் அவரை அடையாளம் காணமுடிந்தது என்று கூறப்பட்டது.

seithi



 



Post a Comment

Previous Post Next Post