இந்தியாவில் புதிய சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்

இந்தியாவில் புதிய சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்


இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த மாதம் நடப்புக்கு வந்த சில புதிய சட்டங்களை எதிர்த்து அவர்கள் போராடுகின்றனர்.

18 வயதுக்கும் கீழ் உள்ள பெண்கள் மீதான கும்பல் பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கப் புதிய சட்டம் வகைசெய்கிறது. 

விசாரணைக்கு முன்னர் சந்தேக நபர்களைத் தடுத்துவைப்பதற்கான காவல்துறையின் அதிகாரங்கள் விரிவாக்கப்படுகின்றன. 

அதோடு, விசாரணை முடிந்த 45 நாள்களுக்குள் நீதிபதிகள் எழுத்துபூர்வமாகத் தீர்ப்புகளை வெளியிடவேண்டும். 

பாதிக்கப்பட்டோரை மையமாகக் கொண்டு மாற்றங்கள் செய்யப்பட்டதாக அரசாங்கம் சொன்னது.

நீதிக்காக நீண்டகாலம் காத்திருப்பதை இது முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அது கூறியது.

இருப்பினும் வழக்கறிஞர்கள், எதிர்க்கட்சிகள், ஆர்வலர்கள் ஆகிய தரப்பினர் மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அவை காவல்துறை அதிகாரிகளுக்கு மிதமிஞ்சிய அதிகாரத்தைக் கொடுக்கும், வழக்கறிஞர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.

seithi



 



Post a Comment

Previous Post Next Post