அதிர்ஷ்டமும் வெற்றியும்

அதிர்ஷ்டமும் வெற்றியும்


அண்மையில் காலஞ்சென்ற 
கவியரசி எஸ். ஏ. இஸ்மத் பாத்திமா அவர்கள் 'வேட்டை'க்கு வழங்கிச் சென்றுள்ள சில நல்ல கருத்துக்கள்:

  • ஒவ்வொரு நபரையும் இறைவன் ஒரு நோக்கத்திற்காகத்தான் படைத்தான். எனவே அந்த நோக்கத்தை நாம் உணர்ந்து எம்மை நாம் சமூகத்தில் சிறந்த மனிதர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அதற்காகப் பாடுபட்டு உழைக்கவும் வேண்டும்.
  • முயற்சி செய்யாமல் கிடைப்பது  அதிஷ்டம்; முயற்சியின் விளைவாக கிடைப்பது வெற்றி! அதிஷ்டத்தில் ஆசை வைக்காமல் வெற்றிமீது ஆசை வைக்க வேண்டும்; அதற்காகக்  கிடைக்கும் சந்தரப்பங்களை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 
  • வாழ்க்கையில் யாரும் யாருடைய நிம்மதியையோ, சந்தோஷத்தையோ சீர்குலைக்க முயலக்கூடாது.  எவரொருவர் மற்றவர் வாழ்க்கையின்  நிம்மதியை சீர்குலைக்க முயன்றாலும் அதற்கான தண்டனை இறைவனிடம் இருந்து அவருக்கு வந்துசேரும். எப்போதும் மற்றவர்களுக்கு நல்லவற்றையே விரும்பினால் நமக்கும் எப்போதும் நல்லதே நடக்கும்.
  • மற்றவரைத் தாழ்த்தியோ தாக்கியோ பேசக் கூடாது. அவ்வாறு ஒருவர் நடந்து கொண்டால். யாரை அவர் தாக்கி, தாழ்த்தி, வீழ்த்திப் பேசினாரோ அவரிடமே தாழ்ந்து வீழ்ந்து கிடக்க வேண்டி ஏற்படும்.
காலஞ்சென்ற இஸ்மத் பாத்திமா அவர்களுக்கு வல்ல அல்லாஹ் நல்லருள் பாதிப்பானாக!




 



Post a Comment

Previous Post Next Post