அந்த 2 பேருக்கும் தலைவணங்குறேன்.. மில்லரை சாய்க்க காற்று ஹெல்ப் பண்ணுச்சு.. மொத்த இந்தியாவுக்கும் சமர்ப்பணம்.. ரோஹித் பேட்டி

அந்த 2 பேருக்கும் தலைவணங்குறேன்.. மில்லரை சாய்க்க காற்று ஹெல்ப் பண்ணுச்சு.. மொத்த இந்தியாவுக்கும் சமர்ப்பணம்.. ரோஹித் பேட்டி


ஐசிசி 2024 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான  இந்திய அணி வென்றது. ஜூன் மாதம் நடைபெற்ற அந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய  இந்தியா 17 வருடங்கள் கழித்து  டி20 உலகக் கோப்பை வென்றது. அதைத் தொடர்ந்து ஜூலை நான்காம் தேதி  இந்திய அணியினர் ஸ்பெஷல் விமானத்தில் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டனர். 

அங்கு அதிகாலையிலேயே விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்த  இந்திய அணியினர் வாழ்த்துக்களையும் பாராட்டையும் பெற்றனர். அதன் பின் மாலை 5 மணிக்கு மேல் மும்பை கடற்கரை சாலையில் திறந்த வெளி பேருந்தில் ஊர்வலமாக வந்த இந்திய அணிக்கு இலட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

குறிப்பாக மும்பை கடற்கரை சாலை ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஒன்றாகக் கூடிய ரசிகர்களுடன் இந்திய அணியினர் வெற்றியை ஆடி பாடி கொண்டாடினர். அதைத்தொடர்ந்து மும்பையில் இருக்கும் புகழ்பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய அணியினர் சென்றனர். அங்கேயும் கூடியிருந்த ரசிகர்கள் இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அத்துடன் அங்கே இந்திய அணிக்கு பிசிசிஐ சார்பில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. 

அந்த விழாவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் இந்திய அணிக்கு 125 கோடி பரிசு தொகையும் கொடுக்கப்பட்டது. அந்த விழாவில் கடைசி ஓவரை வீசிய பாண்டியா மற்றும் அபார கேட்ச் பிடித்து கோப்பையை பெற்றுக் கொடுத்த சூரியகுமாருக்கு தலை வணங்குவதாக தெரிவித்த கேப்டன் ரோகித் சர்மா வெற்றியை மொத்த நாட்டுக்கும் சமர்ப்பிப்பதாக கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இந்த கோப்பை மொத்த நாட்டுக்கானது. நாட்டுக்காக விளையாடிய வீரர்களையும் சேர்த்து இந்த வெற்றிக்காக 11 வருடங்கள் காத்திருந்த ரசிகர்களுக்காக கோப்பையை நாங்கள் சமர்ப்பிக்கிறோம். கடைசி ஓவரில் நான் லாங் ஆன் திசையில் நின்றேன். சூரியகுமார் லாங்க் ஆஃப் திசையில் இருந்தார். ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரை வீசினார். அவருக்கு தலை வணங்குகிறேன்”

“எவ்வளவு ரன்கள் இருந்தாலும் கடைசி ஓவர் வீசுவது கடினம். அந்த நேரத்தில் காற்று அடித்தது. எனவே நாங்கள் பந்தை மில்லருக்கு வெளியே வைக்க முயற்சித்தோம். அவர் அடித்ததும் பந்து வெளியே செல்லும் என்று நான் நினைத்தேன். இருப்பினும் அது களத்தை தாண்டவில்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சூர்யா கேட்ச் பிடித்தது விதிவிலக்காக இருந்தது. அவர் அதை நிறைய பயிற்சி செய்துள்ளார். அதைப் பிடிப்பது மிகப்பெரிய முயற்சி. எப்போதும் போல் இம்முறையும் மும்பை எங்களுக்கு அற்புதமான வரவேற்பு கொடுத்தது. எங்கள் அணியின் சார்பில் ரசிகர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

crictamil



 



Post a Comment

Previous Post Next Post