ராஜகுமாரியின் சுயம்வரம்-39

ராஜகுமாரியின் சுயம்வரம்-39


ஆனால் லூசுயா மட்டும் வீட்டுக்குப் போன பின்னும் தூங்காமல் போனை நோண்டிக் கொண்டே இருந்தாள்.  

"என்னடி இன்னும் தூங்காம? போனையே நோண்டுறாய் ?அதை தூக்கி போட்டுத்து தூங்கு ."என்று மேரி அக்கா அதட்டினாள். 

அப்போது கதையும் வேண்டாம். கத்தரிக்காயும் வேண்டாம் என்று கொறட்டை விட்டுத் தூங்கிய லூசியாவின் தந்தை கண்ணை விழித்தார் .விழித்த வேகத்திலே இருவருக்கும் அவர் பங்குக்கு திட்டினார். 

"உங்களுக்கு இதே வேலையாப் போச்சு. மனிசனை நிம்மதியாக படுத்து உறங்க விடாமல் சாமத்தில் வந்து கத்துறான் .இனிமேல் நீங்க அங்கே இருந்து காலையில் வாங்க .அம்மாவும் மகளும்" என கத்தி விட்டு எழுந்து  தண்ணி குடித்து விட்டு வந்தார். 

அப்போது லூசியா சொன்னாள் ."ஏன் மாறி மாறி திட்டித்தே இருக்கிங்க. நான் ஒன்றும் கேம்ஸ் விளையாடவில்லை .ஓன்லைனிலே சில சந்தேகம் தேடுகிறேன் .நீங்க நித்திரை வந்தால் கண்ணை மூடி படுங்களன். உங்க கண் என்னிடமா? உள்ளது." என அவளுடைய பங்குக்கு அவளும் முணங்கி விட்டு  முகத்தை திருப்பிக் கொண்டு படுத்தாள்.

சிறுது நேரம் அமைதி  மயமானது. பின்னர் மேரி அக்கா வெளிச்சத்தை அணைத்து விட்டு தூங்க சென்றார் யாரும் பேசவில்லை. மேரி அக்காவும் கணவரும் தூங்கியாச்சு. லூசியா மட்டும் முகத்தை மூடிக் கொண்டு .சிந்தனையோடு படுத்திருந்தாள். என்னாச்சு இந்த றிஸ்வினுக்கு .இன்று எவ்விதமான தொடர்வும் இல்லையே ?.அட்லீஸ்ட் ஒரு எஸ்மஸ் கூட போடவில்லையே ?ஒரு வேளை உடம்பு சரியில்லையோ? வேறு ஆள் தேடி விட்டானோ ?. சீ சீ அப்படி இருக்காது. ஏதும் கூட்டாளியோடு சுத்தப் போய் இருப்பான் .

சோக்காளி மாப்பிளை நாளை வரட்டும் இருக்கு கச்சேரி .என்று தனக்குள்ளே திட்டுவதும் சமாதானமாக பேசுவதும் .என்று இருந்த லூசியா கண்ணில் எப்போது தூக்கம் வந்தது என்றே தெரியாமல்  தூங்கி விட்டாள். 

திடீர்னு ஒரு அழு கூரல் கேட்டதுமே. எல்லோரும் துள்ளி எழுந்தார்கள் ."எங்கே சத்தம் என்னாச்சி ?"என்று கேட்டுக் கொண்டேஅக்கம் பக்கம் உள்ளோரும் எழுந்து லைட்டைப் போட்டார்கள் .

பாட்டி வீட்டிலும் பேச்சிக் குரல் கேட்டது . "என்னடி ?பிள்ளை அது யார் வீட்டில் சத்தம்" என்று சின்ன மருமக லூசியாவைக் கேட்டாள் .
"தெரியாதே அண்டி."என இவளும் பதில் கூறினாள். 

எல்லோரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே மீண்டும்  அதே அபாயக் குரல் ஒலித்தது. ஒலி வந்த பக்கம் எல்லோரும் ஓடினார்கள்.  அப்போதுதான் அவர்களுக்குத் புரிந்தது. அந்த இல்லத்தில் வைத்தியம்  பார்த்திட வந்த ஒரு பெண்ணுக்கு கொஞ்சம் மனநிலை சரியில்லைஎன்று. ஆம் அவர்களின் வீட்டின் அருகாமையில் தான் பேய் ஓட்டுவதாகக் கூறிக்கொண்டே ஒரு  பூசாரி இருக்கின்றார் .

அவர் வீட்டுக்கு தினமும் யாராவது வருவதும் போவதும் வழமை தான். ஆனால் இது போன்ற சம்பவம் நடந்ததில்லை.அன்று தான் புதுமையாக இருந்தது.

"சரி விபரம் அறிந்தாச்சு வாங்க போய் தூங்க" என்று பாட்டி அழைத்ததும் எல்லோரும் அவர் அவர் இல்லம் நோக்கிச் சென்றார்கள். 
 
(தொடரும்)


 



1 Comments

  1. நன்றி வேட்டைக்கு தொடர்ந்து என் கதையை வெளியீடு செய்து வருகின்றமைக்கு வேட்டை இதழாக வெளியாக என் வாழ்த்துகள்

    ReplyDelete
Previous Post Next Post