திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -54

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -54


குறள்:1261
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் 
அவர்சென்ற  நாளொற்றித் தேய்ந்த விரல்.

அம்மா!
என் நட்புத்தோழி 
விடுமுறையில அவங்க 
மாமா வீட்டுக்கு அமெரிக்கா 
போனா!
ஒருமாசம் முடிஞ்சு நாளைக்கு 
வர்ராம்மா!
அவளுக்காக 
வழிமேல் விழிவச்சுப் 
பாத்துப்பாத்துக்கண்கள்
சோர்ந்துபோச்சு! 
என்னோட அறையில உள்ள 
சுவத்துல கோடுபோட்டுக் 
கோடுபோட்டு பிரிஞ்சநாள 
எண்ணிஎண்ணி 
விரலும்தேஞ்சுபோச்சு! 
எப்படியோநாளக்கி 
அவவரா! அதுபோதும்எனக்கு.

குறள்:1262
இலங்கிழாய் இன்று மறப்பின்என் 
தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து.

என் பள்ளித்தோழி 
பாலாமணியும் நானும் 
அய்ந்தாம் வகுப்புவரை 
ஒன்றாகப் படித்தோம்! 
பாலாமணியின் தந்தைக்கு 
சிங்கப்பூரில் வேலை கிடைத்ததால் 
பாலாமணி சிங்கப்பூர் 
சென்றுவிட்டாள்! 
நட்புப்பிரிவை மறக்க 
முற்பட்டால் 
உடலும் தோளும் 
வாடுகின்றன! 
எங்கே வளையல் 
கழன்று விழுந்துவிடுமோ 
என்று அச்சமாக உள்ளது. 
கண்டிப்பாக நடப்பது உறுதி.

குறள்:1263
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் 
வரல்நசைஇ இன்னும் உளேன்.

எங்கஅப்பா 
இராணுவத்தளபதி! 
நம்நாட்டு எல்லையிலே 
துணிச்சலாக கடமையைச் 
செய்கின்றார்!
நமது இராணுவவீரர்கள் 
தூங்காமல் நாட்டைக் 
காப்பதால்தான் 
நாமிங்கே நிம்மதியாகத் 
தூங்கமுடிகிறது! 
இன்னும் அய்ந்துநாளில்
எங்க வீட்டுக்கு விடுமுறையில 
வர்ராரு!
அவர்வருகின்றார் என்பதற்காகவே 
நான் காத்துக்கிட்டு இருக்கேன்!

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post