Ticker

6/recent/ticker-posts

மூத்த குடிமக்கள் அதிகமாகப் பேசுங்கள்!!


வயதானவர்கள் அதிகமாகப் பேசுவதைக் கேலி செய்வதும், அவர்கள் பேசுவதைத் தடுப்பதும் இன்று சமுகத்தில் புரையோடிப்போன ஒரு விடயமாகும்.

ஆனால் மருத்துவர்களோ மூத்த குடிமக்கள் பேசுவதை  ஒரு வரமாகக் கருதுகிறார்கள்.  அவர்கள் அதிகம் பேச வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.  ஏனெனில் நினைவாற்றல் இழப்பதைத் தடுப்பதற்கு வேறு வழி இல்லா நிலையில்,  அதிகம் பேசுவதுதான் ஒரே வழி.

மூத்த குடிமக்கள் அதிகம் பேசுவதனால் குறைந்தது மூன்று நன்மைகள் இருப்பதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். 
 
முதலாவதாக:- பேசுவது மூளையை செயல்படுத்துகிறது, ஏனெனில் மொழி மற்றும் எண்ணங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன, குறிப்பாக விரைவாக பேசும்போது அது இயல்பாகவே சிந்தனையை விரைவுபடுத்துகிறது மற்றும் நினைவகத்தை மேம்படுத்துகிறது. பேசாத மூத்த குடிமக்களுக்கு ஞாபக மறதி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

இரண்டாவது:- அதிகம் பேசுவது மன அழுத்தத்தைக் குறைக்கிறது, மனநோயை தடுக்கிறது. அடிக்கடி மூச்சுத் திணறல் மற்றும் அசௌகரியம் காரணமாகப் பேசாமல் இருந்து,  எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே போட்டுக் கொள்வது நல்லதல்ல. அதனால் பெரியவர்களுக்கு அதிகம் பேச வாய்ப்பு கொடுப்பதுதான் நல்லது.

மூன்றாவது:- பேச்சு முகத்தின் சுறுசுறுப்பான தசைகளுக்கும் தொண்டைக்கு பயிற்சி அளிக்கிறது. அத்துடன், நுரையீரலின் திறனை அதிகரிக்கிறது, கண்களையும் காதுகளையும் காயப்படுத்தும் தலைச்சுற்றல் மற்றும் காது கேளாமை போன்ற மறைந்திருக்கும் ஆபத்துகளைக் குறைக்கிறது.

அல்சைமர் நோய் என்பது ஒரு நரம்பியக்கடத்தல் நோயாகும், இது மெதுமெதுவாகத் தொடங்கி, படிப்படியாக மோசமடைகிறது, மேலும் இது 60-70% டிமென்ஷியா நிகழ்வுகளுக்கு காரணமாகும். மிகவும் பொதுவான ஆரம்ப அறிகுறி சமீபத்திய நிகழ்வுகளை நினைவில் கொள்வதில் சிரமம்.

அதனால், ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களை நாடிவரும் 'அல்ஸைமர்' நோயைத் தடுக்க ஒரே வழி, முடிந்தவரை சுறுசுறுப்பாகப் பேசிக் கொண்டிருப்பதைத் தவிர வேறு தீர்வு இல்லை!


 



Post a Comment

0 Comments