விண்வெளியில் வெடித்து சிதறிய ரஷிய செயற்கைக்கோள்

விண்வெளியில் வெடித்து சிதறிய ரஷிய செயற்கைக்கோள்


விண்வெளியில் பயன்படாமல் இருந்த ரஷிய செயற்கைக்கோள் வெடித்து சிதறியது.  

இதனால் சர்வதேச ஆய்வு நிலையத்திலிருந்த விஞ்ஞானிகள் பாதுகாப்பு அறைகளில் தஞ்சமடைந்தனர்.

இது குறித்து நாசா அதிகாரிகள் கூறுகையில்,
ரஷியாவால் கடந்த 2022ம் ஆண்டு பயன்படுத்தப்படவில்லை என்று அறிவிக்கப்பட்ட செயற்கைக்கோள் திடீரென வெடித்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அருகே அது வெடித்ததால் அதன் துகள்கள் அந்த நிலையத்தைத் தாக்கக் கூடும் என அஞ்சி, அதிலிருந்த விஞ்ஞானிகள் பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

பின்னர் ஆபத்து நீங்கியதும் அவர்கள் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர்.
அந்த ரஷிய செயற்கைக்கோள் திடீரென உடைந்து நொறுங்கியதற்கான காரணம் தெரியவில்லை என்றனர்.

nambikkai



 



Post a Comment

Previous Post Next Post